கீர்த்தி சுரேஷ் அந்தாண்ட போம்மா.. க்ரித்தி ஷெட்டி பக்கத்துல வா.. யார் அந்த முதியவர்.. கிளம்பிய சர்ச்சை!
சென்னை: தேசிய விருது வாங்கிய நடிகை கீர்த்தி சுரேஷை அந்த பக்கம் தள்ளிப்போம்மா என கையை பிடித்து இழுத்து நகர்த்தி இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியை அருகே அழைத்து அவர் தோள் மீது கை வைத்து மூத்த இயக்குநர் ராகவேந்திரா ராவ் செய்த செயல் வீடியோவாக வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்து யாரு அந்த இடியட் எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகைகளின் அனுமதியின்றி அவர்களது கையை பிடித்து இழுப்பது மற்றும் அத்துமீறி நடப்பது போன்ற சம்பவங்களை படத்தின் பூஜை நிகழ்வில் நடத்திய ராகவேந்திரா ராவை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அனில் ரவிப்புடி பட பூஜை: தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் அனில் ரவிப்புடி மீண்டும் வெங்கடேஷ் உடன் இணைந்துள்ள புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அந்த படத்தின் பூஜை விழாவில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் க்ரித்தி ஷெட்டி சேலை அணிந்து அழகாக கலந்துக் கொண்டனர்.
அழகு கீர்த்தி சுரேஷ்: திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமிழில் அவர் மிஷ்கின் உடன் இணைந்து நடித்துள்ள சத்யவான் சாவித்ரி படம் அடுத்த மாதம் வெளியாக காத்திருக்கிறது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் இந்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகி 300 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது. இந்நிலையில், அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் மற்றும் க்ரித்தி ஷெட்டி இருவரும் இணைந்து வெங்கடேஷ் டகுபதி படத்தில் நடிக்க உள்ளனர். மஞ்சள் சேலையில் செம அழகாக நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இடியட் என திட்டிய பிரசாந்த்: விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் இந்த வீடியோவை பார்த்து விட்டு ராகவேந்திரா ராவ் செய்தது தவறு என்றும் அவர் யாரென்றே தெரியாமல் இடியட் என திட்டியுள்ளார். இந்நிலையில், அவர் தெலுங்கு திரையுலகின் மூத்த இயக்குநர் என்றும் அங்கு எந்த தவறும் நடைபெறவில்லை. பொதுவாக பூஜை முடிந்தவுடன் சில காட்சிகள் கடமைக்காக படமாக்கப்படும்.
மூத்த இயக்குநர்: அதற்காக எப்படி ஷாட் வைக்கலாம் என்பதை டைரக்டருக்கு சொல்லிக் கொடுக்கும் விதமாகவே அவர் அப்படி செய்துள்ளார் என்றும் அது தெரியாமல் பலரும் அவரை திட்டி வருவதாக தெலுங்கு திரையுலக ரசிகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், தொடர்ந்து நடிகைகளிடம் இதுபோல அவர் அத்துமீறி வருகிறார் என்றும் சில வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications