»   »  ப்ரீத்தியை கவிழ்த்த கிளாமர்!

ப்ரீத்தியை கவிழ்த்த கிளாமர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிளாமர் காட்டினால்தான் ஃபீல்டில் இருக்க முடியும் என்பது கோலிவுட், டோலிவுட்டில் எழுதப்படாத விதி.ஆனால் கிளாமராக நடிக்கப் போய் தனக்குக் கிடைத்த பட வாய்ப்பை இழந்துள்ளார் கிளாமர் டொர்னாடோப்ரீத்தி வர்மா.

18 வயசுப் புயலே படத்தில் புயல் போல கவர்ச்சி காட்டி கலக்கி வருகிறார் ப்ரீத்தி வர்மா. இதுதவிரஎஸ்.ஜே.சூர்யாவின் திருமகன் படத்திலும் ப்ரீத்திக்கு செமையான குத்தாட்ட வாப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆரம்பம் முதலே கிளாமரில் ஏக நம்பிக்கை வைத்திருப்பவர் ப்ரீத்தி வர்மா. நடித்தால் கிளாமராக மட்டுமேநடிப்பது என்ற வைராக்கியப் பிடிவாதத்தோடு கோலிவுட்டில் கலக்கி வருபவர் ப்ரீத்தி.

ஆனால் மலையாளத்தில் அவரைத் தேடி ஒரு பட வாய்ப்பு வந்தபோது அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.காரணம் அது கிளாமர் அதிகம் இல்லாத ரோல் என்பதால். இருந்தாலும், சரி வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுஅந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.

அந்த மலையாளப் படத்தின் பெயர் சங்காதிப்பூச்சா. ஜெயசூர்யாதான் இதில் ஹீரோ. படத்தின் ஷூட்டிங்பல்வேறு காரணங்களால் தாமதப்பட்டுக் கொண்டு வந்தது. ஒரு வழியாக ஷூட்டிங் அறிவிக்கப்பட்டபோது,ப்ரீத்தி வர்மா படத்தில் நடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது.

என்ன நடந்தது? ப்ரீத்தி வர்மா தமிழில் அதிக கிளாமர் காட்டி நடித்த ஸ்டில்களைப் பார்த்துள்ளார் மலையாளப்படத்தின் தயாரிப்பாளர். அய்யோ, இப்படி ஒரு கிளாமர் புயலை எனது படத்தில் நடிக்க வைத்தால் படம் படுத்துவிடுமே என்று பயந்து போய் ப்ரீத்தியைத் தூக்கி விட்டாராம்.

தனது படத்தின் கதைக்கும், கிளாமருக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் ப்ரீத்தியையும், கிளாமரையும் பிரிக்கமுடியாது போலிருக்கு. அப்படிப்பட்ட நாயகி எனது படத்தில் நடித்தால் படம் அவ்ளோதான் என்பதுதயாரிப்பாளரின் பயம்.

இப்போது ப்ரீத்திக்குப் பதிலாக ஹீரோயின்களைப் போட்டு படமெடுத்து வருகிறார்களாம்.

ஷகீலாவுக்கு பேராதரவு கொடுத்த மலையாளத் திரையுலகில் கிளாமரைக் கண்டால் பயப்படுகிறார்கள் என்றால்வியப்புதான் ஏற்படுகிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil