»   »  போதை கும்பல் பிடியில் ப்ரீத்தி வர்மா?

போதை கும்பல் பிடியில் ப்ரீத்தி வர்மா?

Subscribe to Oneindia Tamil

நடிகை ப்ரீத்தி வர்மா போதைப் பொருள் கும்பலின் பிடியில் சிக்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பிற்கு போன நடிகை ப்ரீத்தி வர்மா எங்கே போனார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.இதற்கிடையில் கே.கே. நகர் காவல் நிலையத்திற்கு மகேந்திரன் என்பவர் ப்ரீத்தி வர்மாவின் பெயரில் கடிதம் அனுப்பினார்.

இந்த கடிதம் சென்னை மவுண்ட் ரோடு தபால் நிலையத்தில் இருந்து ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பட்டிருந்தது. அதே போல் மீண்டும் இன்னொருகடிதமும் கே.கே. நகர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது.

அதில் ப்ரீத்தி வர்மா தனது கையெழுத்தையும், விரல் ரேகையையும் பதிவு செய்துள்ளார். அக் கடிதத்தில்,

நான் தற்போது மும்பையில் உள்ளேன். என்னை யாரும் தேட வேண்டாம். தற்போது தனியார் அலுவலகம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். என்பெற்றோர் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றனர். இதுகுறித்து தகவல்களை தெரிந்து கொள்ள (சில செல்போன் நம்பர்களை குறிப்பிட்டு) விபச்சாரபுரோக்கர்கள், சந்துரு, குமார், பாலா ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

மகேந்திரன் ரொம்ப நல்லவர். துணை நடிகை கோமதி, சேகர் ஆகியோரையும் என் விஷயத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம். இதுவே என் கடைசிகடிதம் என ப்ரீத்தி எழுதியுள்ளார்.

ப்ரீத்தி மாயமானது குறித்து மார்வாடியான மகேந்திரனை போலீசார் விசாரித்த பின் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே மகேந்திரன் மூலமாக ப்ரீத்தி வர்மாவிற்கு போதைப் பழக்கம் ஏற்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாகபோதைப் பொருள் பயன்படுத்தியதால் ப்ரீத்திக்கு ஏதாவது மனச் சிதைவு ஏற்பட்டிருக்கலாம், அல்லது அவர் போதைப் பொருள் கும்பலிடமேமாட்டிக் கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil