»   »  பச்சை நிறமே ப்ரீத்தி வர்மா

பச்சை நிறமே ப்ரீத்தி வர்மா

Subscribe to Oneindia Tamil

அம்மா, அப்பா மீது ஊடல் கொண்டு ஊரை விட்டு ஓடிப் போய் மீண்டும் திரும்பி பதுங்கிப் பதுங்கி நடித்து வரும் ப்ரீத்தி வர்மா, பச்சை நிறமே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார்.

அம்மாவும், அப்பாவும் தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பரபரப்புப் புகார் கூறிய ப்ரீத்தி வர்மா அவர்களிடமிருந்து தப்பிக்க ஹைதராபாத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

சில கால தலைமறைவுக்குப் பின்னர் சென்னை திரும்பிய அவர் போலீஸில் புகார் கொடுத்தார். தற்போது போலீஸ் பாதுகாப்புடன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பச்சை நிறமே படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்து நடிக்க வைத்துள்ளனர். இந்தப் படத்தின் நாயகி நந்திதா. இதுவரை கிளாமர் பாத்திரங்களில் நடித்து வந்த நந்திதா இதில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கவுள்ளாராம்.

அதேசமயம் கிளாமரிலும் கொஞ்சம் போல திறமை காட்ட வைத்துள்ளாராம் இயக்குநர் கார்க்கி. யுகேந்திரன்தான் இதில் நாயகன். நாகரீக மோகம் கொண்டு திரிந்தால் என்ன ஆகும் என்பதை விளக்கும் படமாம் பச்சை நிறமே.

நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாதை மாறி தவறான பாதைக்குச் செல்வதால் அவளது குடும்பம் எப்படியெல்லாம் சிதறிப் போகிறது என்பதையும் படம் சித்தரிக்கிறதாம்.

இப்படிப்பட்ட கதையை வைத்துக் கொண்டு கிளாமரில் என்ன மாதிரியெல்லாம் பின்னி எடுக்கலாம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வகையில் இந்தப் படத்திலும் பச்சை நிறம் படம் முழுக்க இருக்கிறதாம். அதேசமயம் நல்ல மெசேஜையும் வைத்துள்ளனராம்.

காமெடிக்கு வடிவேலு காம நெடிக்கு ப்ரீத்தி வர்மா என்று கலக்கலாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil