»   »  பாயும் புயல்!

பாயும் புயல்!

Subscribe to Oneindia Tamil

பதினெட்டு வயசு புயலே படத்தைப் பார்க்கப் போகிறவர்கள், கிளாமர் புயலில் சிக்கி சின்னா பின்னாமாகப்போவது உறுதி.

ப்ரீத்தி வர்மா, ஹீரோயின் ஆசையில் தான் கோலிவுட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்குக் கிடைத்ததுகுத்துப் பாட்டு வாய்ப்பு தான். இப்போது தான் முழு நீள ஹீரோயினாகியுள்ளார்.

பதினெட்டு வயசு புயலே படத்தில் ப்ரீத்திதான் ஹீரோயின். சும்மா நாயகி இல்லை, கும்மான கவர்ச்சியை அள்ளிஇறைக்கும் கிளாமர் புயலாக வருகிறார் ப்ரீத்தி வர்மா.படம் முழுக்க ஹீரோ அஜய் பிரதீப்புடன் புகுந்து விளையாடியுள்ளாராம் ப்ரீத்தி வர்மா.

கதையை விட ப்ரீத்தியின் சதைப் பகுதிதான் படு ஸ்டிராங்காக படமாக்கப்பட்டுள்ளதாம்.அவருக்கான காஸ்ட்யூமை அப்படியே சல்லடை போலவும் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு படுடிரான்ஸ்பரண்ட்டாம். இளமை துள்ளும் கதை என்பதால் இளைஞர்களின் நாடித் துடிப்பை அறிந்துஅவர்களுக்கான மேட்டரை அக்கு அக்காக போட்டுத் தாளித்திருக்கிறாராம் இயக்குநர் விஜய்.

படம் முழுக்க கிளாமர் ஜாஸ்தி போல என்று விஜய்யிடம் கேட்டால், இளசுகளுக்கு ஏற்ற படம் என்பதால்அதுதொடர்பான காட்சிகள் படம் நிறைய இருக்கிறது. அதேசமயம், எங்குமே வரம்பு மீறவில்லை என்றார் விஜய்.

சரி படத்தின் கதையை சொல்லவே இல்லையே என்று வெசனப்படுபவர்களுக்காக: 18 வயசு வாலிப, யுவதிகள்அந்த வயதில் எப்படி இருப்பார்கள், நடந்து கொள்வார்கள், அவர்களது உணர்வுகள் என்ன என்பதைத்தான்இப்படத்தில் விலாவாரியாக சொல்லியுள்ளார்களாம்.

நல்லா ஜொள்ளியிருப்பார்கள் என நம்புவோம்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil