»   »  சுழன்றடிக்கும் ப்ரீத்தி

சுழன்றடிக்கும் ப்ரீத்தி

Subscribe to Oneindia Tamil

18 வயசு புயலே படத்தில் கிளாமர் புயல் ப்ரீத்தி வர்மா, ரசிகர்களை ரொங்க வைக்கும் வகையில் கிறங்கடிக்கும்கிளாமரில் சுழன்றடித்திருக்கிறாராம்.

அஜய் பிரதீப், ப்ரீத்தி வர்மா இணையில் உருவாகும் படம்தான் 18 வயசு புயலே. பதினெட்டு இளசுகளின்இயல்பை இந்தப் படத்தில் கற்பனை கலந்து கொடுத்திருக்கிறார்களாம்.

18 வயசுன்னாலே அது இளமைப் புயல்தான் என்ற கணக்கில் படத்திற்கும் புயலையே தலைப்பாக வைத்துவிட்டார்கள் போலும். அதை நிரூபிக்கும் வகையில் ப்ரீத்தி வர்மாவை வைத்து கிளாமரில் அரட்டியுள்ளார்கள்.

படத்தின் கதையை விட ப்ரீத்தியின் கிளாமரில் தான் நம்பிக்கை வைத்து படத்தை உருவாக்குகிறார்கள் எனநினைக்கும் அளவுக்கு படம் முழுக்க ப்ரீத்தி படு ப்ரீஸியாக கிளாமரை அள்ளித் தெளித்துள்ளார்.

விதம் விதமான கிளாமர் போஸ்களில் ப்ரீத்தியைப் பார்க்கும் போது 81 வயது பயலுக்கும் 18 வயசு திரும்பிவிடும். அவ்வளவு ஹாட்டாக இருக்கிறது ப்ரீத்தியின் இளமைத் துள்ளாட்டம்.

பனியனிலும், டிரவுசரிலும் ப்ரீத்தியை உருட்டி விளையாட விட்டிருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க அவர்பண்ணும் ரவுசு, ப்ரீத்திக்கு கூடுதல் மவுசைக் கொடுக்கும்.

இந்தக் கால இளசுகளுக்கு கதையை விட சதைதான் ரொம்பப் பிடித்தமாக இருக்கிறது என்ற பொடிசுகளின்நாடியை சரியாக உணர்ந்து ப்ரீத்தியை பிதுக்கி எடுத்திருக்கிறார். ப்ரீத்தியின் இளமை வேகத்துக்கு நல்ல ஈடுகொடுத்து பிரதீப்பும் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

இந்தப் படம் வெளியாகும் முன்பே ப்ரீத்தியின் பிரபலத்தை உணர்ந்த எஸ்.ஜே.சூர்யா, தான் நடிக்கும் திருமகன்படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக ப்ரீத்தியை போட்டுள்ளாராம். அதில் சூர்யாவும், ப்ரீத்தியும் சேர்ந்து ஒருகுத்தாட்டத்தில் கொத்தியிருக்கிறார்களாம்.

வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு, தேவா போட்டுள்ள அந்த ஸ்பெஷல் கானம், முன்வரிசை விடலைகளைதுள்ளியாட வைக்குமாம். அப்படி ஒரு அச்சக் குத்தாக அம்சமாக வந்திருக்கிறதாம் அந்தப் பாடல்.

கிளாமரே சர்வமும் என்பதுதான் ப்ரீத்தியின் தாரக மந்திரமாக இருக்கும் போல. பாதாம் கீர் சாப்பிடுவது போலகிளாமர் ரோல்களை செய்வதில் படு சுவாரஸ்யமாக இருக்கிறார் வர்மா. குடும்ப குத்துவிளக்கு கணக்காக வந்துபோனால் தூக்கி பரணில் ஏற்றி விடுவார்கள் என்பதால்தானோ என்னவோ, பளிச்சிடும் சோடியம் வேப்பர்லைட்டாக மாறி கிளாமரில் பிரகாசிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.

திமிறும் இளமையும், குறும் கிளாமருமாக, மதமதப்பும், கதகதப்புமாக, படு கெட்டப்பாக கலகலக்கும் ப்ரீத்தி, 18வயசு புயலேவில் போட்டுள்ள ஆட்டம், ரசிகர்களை ஆட்டம் காண வைக்கும் என்பதில் சந்தேகம் வேறுஇருக்குமோ?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil