வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!
சென்னை: நடிகை அமலா பால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அடிக்கடி அவரை அக்கறையுடன் கணவர் பார்த்துக் கொள்ளும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சாப்பிடும் போது கூட இந்தி பாட்டை பாடி மனைவியை ரொமான்ஸ் செய்யும் கணவர் ஜகத் தேசாய் பாடலை கேட்டு காதை பொத்திக் கொள்ளும் க்யூட் வீடியோவை அமலா பால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிந்து சமவெளி படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். அந்த படத்தின் திரைக்கதை பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமலா பாலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், அதே ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்த அமலா பாலை அதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

தெய்வத் திருமகள் படத்தில் நடித்த அமலா பாலுக்கும் அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும் காதல் மலர இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். விஜய்யை வைத்து ஏ.எல். விஜய் இயக்கிய தலைவா படத்திலும் அமலா பால் தான் ஜோடியாக நடித்திருந்தார்.
முதல் கணவருடன் விவாகரத்து: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால் இயக்குநர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அமலா பால் குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏ.எல். விஜய் மற்றும் அவரது தந்தை ஏ.எல். அழகப்பன் அடுக்கிய நிலையில், அமலா பால் மற்றும் ஏ.எல். விஜய் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
ஆடை படத்தில்: முதல் படத்திலேயே போல்டாக நடித்து சர்ச்சைகளை சமாளித்த அமலா பால் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் முழு நிர்வாணமாகவே நடித்து மற்ற நடிகைகளுக்கு இப்படி நடிக்க முடியுமா என சவால் விட்டார். ராதிகா ஆப்தே போல பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் அந்த படத்திற்கு பிறகு கிடைக்காமலே போய் விட்டது.
கர்ப்பமாக இருக்கும் அமலா பால்: நிறைமாத கர்ப்பமாக அமலா பால் தற்போது இருந்து வரும் நிலையில், அவரது இரண்டாவது கணவர் ஜகத் தேசாய் அமலா பால் உணவு உண்ணும் போது பாட்டு பாடி அவரையும் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
காதை பொத்திக் கொண்டு: ஆனால், பாட்டு பாடுகிறேன் என தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்பதை காட்டும் விதமாக காதை பொத்திக் கொண்டு அமலா பால் வாயில் சோறை அள்ளி வைத்து உண்ணும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றன. சமீபத்தில், அமலா பாலுக்கு சூப்பராக வளைகாப்பு நிகழ்ச்சியையும் அவரது கணவர் நடத்தியிருந்தார்.
150 கோடி வசூல்: பிருத்விராஜ் உடன் இணைந்து அமலா பால் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 150 கோடி வசூலை ஈட்டியுள்ளது. அந்த படத்துக்குப் பிறகு மீண்டும் அமலா பாலுக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குழந்தையை பெற்ற பின்னர் மீண்டும் நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேக்கப் இல்லாத நிலையிலும் அமலா பால் எவ்ளோ அழகா இருக்காருன்னு வீடியோவில் பாருங்க..


Click it and Unblock the Notifications











