நீச்சல் குளத்தில்.. வயிற்றில் குழந்தையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை.. கண்டித்த ரசிகர்கள்!

சென்னை: கார்த்தியின் சகுனி மற்றும் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா.

கன்னட நடிகையான இவர் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் தான் கர்ப்பமாக உள்ளதை அறிவித்த பிரணிதா தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டித்து கமெண்ட் செய்துள்ளனர்.

வெள்ளை பம்பரம்

வெள்ளை பம்பரம்

போக்கிரி படத்தின் கன்னட ரீமேக் படமான பொருக்கி படத்தின் மூலம் நாயகியாக 2010ல் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், உதயன் எனும் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். கார்த்தியின் சகுனி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கோலிவுட்டில் தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற வெள்ளை பம்பரம் பாடல் வேறலெவல் ஹிட்டடித்தது. சூர்யாவுக்கு பிளாஷ்பேக்கில் ஜோடியாக மாசு என்கிற மாசிலாமணி படத்தில் நடித்திருப்பார் பிரணிதா.

அன்னபூரணி

அன்னபூரணி

கொரோனா காலத்தில் பசியால் தவித்த பல லட்சம் மக்களுக்கு தனது டிரஸ்ட் மூலமாக தினமும் ஆயிரக் கணக்கான நபர்களுக்கு உணவு வழங்கி அன்னபூரணியாகவே காட்சி தந்தார் பிரணிதா. படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பொது சேவை செய்வதிலும் இவருக்கு அதிக ஆர்வம் உள்ளது.

தொழிலதிபருடன் திருமணம்

தொழிலதிபருடன் திருமணம்

கடந்த 2021ம் ஆண்டு மே 30ம் தேதி நிதின் ராஜு எனும் தொழிலதிபருடன் திருமணம் செய்து கொண்டார் நடிகை பிரணிதா சுபாஷ். பிரணிதாவின் திருமண செய்தியை அறிந்த திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் இந்த ஏப்ரலில் ஒரு சூப்பரான செய்தியை ஷேர் செய்திருந்தார்.

பிரெக்னன்ஸி டெஸ்ட்

பிரெக்னன்ஸி டெஸ்ட்

கடந்த ஏப்ரல் 11ம் தேதி தனது கணவர் கட்டியணைத்து தூக்க தனது கையில் பிரெக்னன்ஸி டெஸ்ட் மற்றும் ஸ்கேன் புகைப்படங்களை காட்டியபடி தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்கிற சந்தோஷ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் நடிகை பிரணிதா. கடந்த ஆண்டு ஹங்காமா, புஜ் தி பிரைட் ஆஃப் இந்தியா என 2 இந்தி படங்களில் நடித்திருந்தார்.

நீச்சல் குளத்தில்

நீச்சல் குளத்தில்

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் மோனோகினி உடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் நடிகை பிரணிதா சுபாஷ். வீக்கெண்டை நீச்சல் குளத்தில் செம ஜாலியாக கொண்டாடுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.

கண்டித்த ரசிகர்கள்

கண்டித்த ரசிகர்கள்

வயிற்றில் குழந்தையுடன் இப்படி ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நீச்சல் குளத்தை ஒட்டியெல்லாம் நடக்காதீங்க பிரணிதா, தவறி விழுந்தால் கஷ்டமாகி விடும் என்றும், இந்த நேரத்தில் அதிகமாக தண்ணியில் விளையாடினால் குழந்தைக்கு சளித் தொல்லை பிடித்து விடும் என ரொம்பவே அக்கறையுடன் ஏகப்பட்ட ரசிகர்கள் பிரணிதாவின் செயலை கண்டித்து கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X