கர்ப்பமாக இருக்கும் பிரணிதா வெளியிட்ட குத்தாட்ட வீடியோ.. ஷாக்கான ரசிகர்கள்.. ஆனால், அதை கவனிக்கல!
பெங்களூரு: சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பெங்களூருவை சேர்ந்த நடிகை பிரணிதா சமீபத்தில் தான் கர்ப்பமாக உள்ளதை அறிவித்து இருந்தார்.
வீக்கெண்டை முன்னிட்டு நீச்சல் குளத்தில் பிரணிதா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டித்திருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள குத்தாட்ட வீடியோவை பார்த்து பலரும் ஷாக் ஆகி விட்டனர்.
வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டா இப்படி ஆட்டம் போடுறீங்க என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பிரணிதா திருமணம்
கடந்த 2021ம் ஆண்டு மே 31ம் தேதி நடிகை பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் காதல் மற்றும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என தகவல்கள் வெளியாகின. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட பிரணிதாவின் திருமணம் ரொம்பவே எளிமையான முறையில் நடைபெற்றது.

உடனடியாக கர்ப்பம்
திருமணம் செய்து கொண்டாலும், 4 முதல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகள் குழந்தையை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டு விடுவார்கள். ஆனால், காஜல் அகர்வாலை தொடர்ந்து நடிகை பிரணிதாவும் திருமணத்தை முடித்த கையோடு உடனடியாக கர்ப்பமாகி அம்மா ஸ்தானத்தை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நீச்சல் குளத்தில்
கடந்த வாரம் நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். நெட்டிசன்கள் பலரும், இந்த நேரத்தில் நீச்சல் குளத்திற்கெல்லாம் ஏன் போறீங்க என கண்டித்து கமெண்ட் போட்டு இருந்த்னர்.

அதை கவனிக்கல
ஆனால், வீடியோவுக்கு கேப்ஷனாக, இது த்ரோபேக் வீடியோ என பிரணிதா பதிவிட்டு இருப்பதை பலரும் கவனிக்கவில்லை என்பது தான் இதில் வேடிக்கையான விஷயமே.. கர்ப்பமாக ஆவதற்கு முன்பு தான் இப்படி பிரணிதா ஆடியுள்ளார். கர்ப்பம் ஆன பிறகு இப்படி ஆட முடியவில்லையே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தான் இந்த வீடியோவை தற்போது ஷேர் செய்துள்ளார்.

அதை கவனிக்கல
ஆனால், வீடியோவுக்கு கேப்ஷனாக, இது த்ரோபேக் வீடியோ என பிரணிதா பதிவிட்டு இருப்பதை பலரும் கவனிக்கவில்லை என்பது தான் இதில் வேடிக்கையான விஷயமே.. கர்ப்பமாக ஆவதற்கு முன்பு தான் இப்படி பிரணிதா ஆடியுள்ளார். கர்ப்பம் ஆன பிறகு இப்படி ஆட முடியவில்லையே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தான் இந்த வீடியோவை தற்போது ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











