கர்ப்பமா இருக்கும் போது இப்படி செய்யலாமா ரம்பா?
ரம்பா வளைகாப்பு வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னை: வளைகாப்பு நிகழ்ச்சியில் கலா மாஸ்டருடன் சேர்ந்து ரம்பா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
நடிகை ரம்பா தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடா நாட்டில் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டரும் கலந்துகொண்டார்.

அப்போது ரம்பாவுடன் இணைந்து கலா மாஸ்டர் நடனமாடினார். கலா மாஸ்டருக்கு இணையாக கர்ப்பமாக உள்ள ரம்பாவும் நடனமாடிய வீடியோ மற்றும் போட்டோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஹீரோயினாக நடித்த காலத்திலேயே நடிப்பை போலவே நடனத்திலும் மக்களை கவர்ந்தவர் ரம்பா. பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நடனப் போட்டி நிகழ்ச்சியான மானாட மயிலாடவில் கலா மாஸ்டருன் சேர்ந்து நடிகை ரம்பாவும் நடுவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications