கர்ப்ப காலத்தில் தாய்லாந்து சென்ற சமந்தா.. வாடகை இத்தனை லட்சமா?.. காஸ்ட்லி ஓய்வா இருக்கே

சென்னை: நடிகை சமந்தா இப்போது இயக்குநர் ராஜ் நெடிமோருவை காதலித்து திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்ப காலத்தில் ஓய்வெடுப்பதற்காக கணவருடன் இப்போது தாய்லாந்து சென்றிருக்கிறார். அவர்கள் அங்கே தங்கியிருக்கும் ரிசார்ட்டின் வாடகை குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறது. இரண்டு பேரும் காஸ்ட்லியான ஓய்வில் இருப்பதாகவே கருதப்படுகிறது.

தமிழில் நடித்துக்கொண்டிருந்த சமந்தா; தெலுங்கில் நாக சைதன்யாவோடு நடித்தபோது அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான பின்னும் நடித்த அவர்; சில வருடங்களிலேயே விவாகரத்தும் பெற்றார். விவாகரத்தின்போது நாக சைதன்யா கொடுத்த 100 கோடி ரூபாய் ஜீவனாம்சத்தை வேண்டாம் என்று சாம் சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. அது அந்த சமயத்தில் அவருக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Pregnant Samantha and Raj Nidimoru s Luxury Thailand Getaway Costs Up to Rs 7 5 Lakh
Photo Credit:

இரண்டாவது திருமணம்: விவாகரத்து, மையோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்போது தன்னை வைத்து சிட்டாடல், ஃபேமில் மேன் வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் ராஜை காதலித்தார். ராஜுவும் ஏற்கனவே திருமணமாகி டைவர்ஸ் ஆனவர். இரண்டு பேரின் காதலும் கடந்த வருடத்தில் அடுத்தக்கட்டமான திருமண மேடைக்கும் சென்றது. இப்போது மகிழ்ச்சியான ஜோடியாக இரண்டு பேரும் வாழ்ந்துவருகிறார்கள்.

Also Read
ஆஸ்திரேலியா போன திரிஷா.. விஜய் சாரை கேட்டதாக சொல்லுங்கள்.. எங்கே போனாலும் விடமாட்றாங்களே
ஆஸ்திரேலியா போன திரிஷா.. விஜய் சாரை கேட்டதாக சொல்லுங்கள்.. எங்கே போனாலும் விடமாட்றாங்களே

சமந்தாவின் படம் சூப்பர் ஹிட்: இரண்டாவது திருமணத்துக்கு பிறகு மா இன்ட்டி பங்காரம் திரைப்படத்தில் நடித்தார். இதிலும் சிட்டாடல் மாதிரியே ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருந்தார். படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. அந்தப் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில்தான் சமந்தா கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியே தெரிந்தது. பிறகு அவரும் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார். மேலும் மகப்பேறு விடுமுறையில் செல்வதாகவும் அறிவித்திருந்தார்.

Recommended For You
ஆடி வெள்ளி.. காளி அம்மன் கோயிலுக்கு சென்ற நயன்தாரா.. பக்தி பரவசத்தில் இருக்காங்க
ஆடி வெள்ளி.. காளி அம்மன் கோயிலுக்கு சென்ற நயன்தாரா.. பக்தி பரவசத்தில் இருக்காங்க

தாய்லாந்தில் கணவருடன்: அப்படி அறிவித்த கையோடு சில ப்ராஜெக்ட்டுகளில் கமிட்டானார். அநேகமாக குழந்தை பிறந்து உடல் சரியான பிறகு அதையெல்லாம் முடித்துக்கொடுப்பார் என தெரிகிறது. இப்போது அவரும், கணவர் ராஜ் நெடிமோருவும் தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார்கள். அங்கே சென்று முழுக்க முழுக்க ஓய்வு மட்டுமே எடுத்துவருகிறார்கள். இந்நிலையில் தாய்லாந்தில் அவர்கள் ஓய்வெடுப்பதற்காக தங்கியிருக்கும் ரெசார்ட்டின் வாடகை குறித்த தகவல்கள் வெளியாகி புருவத்தை உயர்த்தியிருக்கின்றன.

எவ்வளவு வாடகை?: அதாவது அவர்கள் இரண்டு பேரும் சென்றிருப்பது, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் வெல்னஸ் ரெசார்ட் ஆகும். அங்கே ஒரு தம்பதி இரண்டு இரவுகள் தங்க; மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்வரை வாடகையாம். அங்கே சவுட்ன் தெரபி, உடற்பயிற்சி, கடற்கரை காட்சிகள் என பல விஷயங்கள் இருக்குமாம். சீசன்,அறையின் வசதிகளை பொறுத்து வாடகை தொகை மாறுபடும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக அங்கிருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்த சமந்தா, "எனக்கு மிக மிக பிடித்த பயணம் என்றால் அது வெல்னஸ் பயணம்தான்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமந்தா இவ்வளவு வாடகை கொடுத்து காஸ்ட்லியாக ஓய்வெடுப்பது ஓகே; உடல்நலத்தை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் அக்கறையோடு அட்வைஸ் செய்துவருகிறார்கள்.

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X