Samantha: பேபி-மூன் க்ரேவிங்ஸா?.. ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா.. பேபி பம்ப் அழகா தெரிய ஆரம்பிச்சுடுச்சே!

சென்னை: வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை உற்சாகமாக கொண்டாடி வரும் நடிகை சமந்தா, தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கர்ப்பமாக இருப்பதை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த சமந்தா, இப்போது வெளியிட்டுள்ள ஒவ்வொரு பதிவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தாய்லாந்தில் அமைந்துள்ள அமைதியான ரிசார்ட்டில் ஓய்வெடுத்து வரும் சமந்தா, இயற்கை சூழலை ரசித்தபடியும், கண்ணாடி முன் செல்ஃபி எடுத்தபடியும், மழையில் குடை பிடித்து நடந்தபடியும், கடற்கரையை பார்த்தபடி புத்தகம் படித்தபடியும் எடுத்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு புகைப்படத்திலும் அவரது முகத்தில் தெரியும் அந்த அமைதியும், தாய்மை தரும் மகிழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதிலும் சில புகைப்படங்களில் சமந்தாவின் பேபி பம்ப் லேசாக வெளிப்படத் தொடங்கியிருப்பதை ரசிகர்கள் கவனித்துள்ளனர். "பேபி-மூன் க்ரேவிங்ஸ் போல இருக்கே", "அம்மாவாகப் போகும் சந்தோஷம் முகத்திலேயே தெரிகிறது", "பம்ப் ரொம்ப க்யூட்டா இருக்கு" என்று கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகின்றனர்.

Pregnant Samantha Glows on Thailand Babymoon Baby Bump Photos Melt Fans Hearts

பேபி பம்ப்: இதுமட்டுமல்லாமல், "Wellness has always been my favourite kind of travel 🤍" என்ற கேப்ஷனுடன் இந்த புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதே தனக்கு மிகவும் பிடித்த பயணம் என்பதையே அந்த ஒரு வரியில் சொல்லிவிட்டார். புகைப்படங்கள் மட்டுமல்லாமல், பேபி பம்ப்புடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் சமந்தா வெளியிட்டுள்ளார். கர்ப்ப காலத்திலும் மருத்துவர் ஆலோசனைப்படி உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் அவரது முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Pregnant Samantha Glows on Thailand Babymoon Baby Bump Photos Melt Fans Hearts

மிளிரும் சமந்தா: சமீப காலமாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை மிகவும் இயல்பாக ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் சமந்தா, இப்போது இந்த பேபி-மூன் புகைப்படங்கள் மூலம் மீண்டும் இணையத்தின் பேசுபொருளாக மாறியுள்ளார். "எப்போதும் போல ஸ்டைலாகவும், இப்போது அம்மாவாகப் போகும் அழகிலும் மிளிர்கிறார்" என்பதே ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. சமீபத்தில் சமந்தா நடித்து வெளியான எங்கள் வீட்டுத் தங்கம் படம் உலக அளவில் ரூபாய் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X