கண்ணப்பா படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டிய ப்ரீத்தி முகுந்தன்.. அதிலும் அந்த ஷாட் எல்லாம் யப்பா!
சென்னை: விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் மற்றும் மோகன்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள கண்ணப்பா படத்தில் கிளாமர் குயினாக கலக்கியிருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன். கண்ணப்பா திரைப்படம் பக்திப் படம் என நம்பிப் போய் தியேட்டருக்குள் உட்காரும் ரசிகர்களை வசனமாடா முக்கியம் படத்தை பாருடா என சொல்ல வைத்து விடுகிறார் ப்ரீத்தி முகுந்தன்.
ஆரம்பத்தில் அருவியில் இருந்து அவர் குளித்துவிட்டு வரும் காட்சியில் விஷ்ணு மஞ்சு மயங்குகிறாரோ இல்லையோ, ஒட்டுமொத்த இளைஞர்களும் வசியம் வைத்தது போல ஸ்டார் பட நடிகையின் அழகில் மயங்கி அசந்து போய் விடுகின்றனர்.

பிரபுதேவா கொரியோகிராஃபியில் இரண்டு பாடல்களில் கண்கொள்ளா காட்சியாக அவர் நடித்திருப்பதும் நடனமாடியிருப்பதும் இளைஞர்களை கண்டிப்பாக ரீவாட்ச் போட செய்து விடும்.
பேரழகி ப்ரீத்தி முகுந்தன்: 24 வயதே ஆகும் ப்ரீத்தி முகுந்தன் கண்ணப்பா படத்தில் நெமிலி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திண்ணனை காதலிக்கும் காட்சிகள், சிவனை வழிபடும் காட்சிகள், பிரபாஸ் உடன் பேசும் காட்சிகள், போரில் சண்டையிடும் காட்சிகள், ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் என தனக்கு கொடுத்த வேலையை ஓவர்டோஸ் போட்டே நடித்து கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஸ்டார் பட ஹீரோயின்: கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ஓம் பீம் புஷ் மற்றும் தமிழில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் ப்ரீத்தி முகுந்தன். டீஜே அருணாச்சலத்துடன் 2022ம் ஆண்டு வெளியான முட்டு முட்டு பாடல் மூலம் பிரபலமான இவர் சாய் அபயங்கரின் "ஆசை கூட" பாடலில் நடனமாடி சர்வதேச அளவில் டிரெண்டானார். ஸ்டார் படத்தைத் தொடர்ந்து கண்ணப்பா படத்தில் நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தன் மலையாளத்தில் மெயினே பியார் கியா படத்திலும் தமிழில் அதர்வா முரளி நடித்துள்ள இதயம் முரளி படத்தின் ரிலீசுக்காகவும் காத்திருக்கிறார்.
வேறலஎவல் கவர்ச்சி: கண்ணப்பா படத்தை பக்தி படத்தில் இருந்து காதல் காவியமாக மாற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் தனது டஸ்க்கி ஸ்கின் டோனை வைத்தே செய்து அசத்தியிருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன். எந்த டிரெஸ் கொடுத்தாலும் ஓகே என சொல்லி போட்டுக் கொண்டு தாராளமாக நடித்து விடுவார் போல என ரசிகர்கள் தியேட்டரிலேயே கவர்ச்சியான உடையுடன் கண்ணப்பா படத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடித்ததை பார்த்து வாயை பிளந்து விட்டனர்.

இப்படியொரு சீனா?: கண்ணப்பா படத்தில் விஷ்ணு மஞ்சுவும் ப்ரீத்தி முகுந்தனும் காதல் பாடல் ஒன்றில் பிரபுதேவா மாஸ்டரின் வேறலெவல் ஸ்டெப்பில் படு கிளாமராக கொடுத்துள்ள போஸை படத்தில் இருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பலரும் தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ப்ரீத்தி முகுந்தனை டிரெண்டாக்கி வருகின்றனர்.
அதுவே பிரச்னை: ஓவர் கிளாமராக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளது அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தாலும், கண்ணப்பா படத்துக்கு அவரது போர்ஷன் ரொம்பவே பிரச்னையை உண்டாக்குகிறது என்றும் முதல் பாதி முழுவதும் சிவ பெருமான் படமாகவே இல்லை என்றும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் சோஷியல் மீடியாவில் ட்ரோல்கள் கிளம்பவும் காரணமாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











