2 மணிநேரம் வாக்குமூலம் அளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா: அப்படி என்ன கூறினார்?
மும்பை: தனது முன்னாள் காதலருக்கு எதிராக புகார் கொடுத்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்த பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் போலீசாரிடம் செவ்வாய்க்கிழமை மாலை வாக்குமூலம் அளித்தார்.
தனது வீட்டில் இருந்தே வாக்குமூலம் அளிக்க விரும்பிய ப்ரீத்தையை ஸ்டேடியத்திற்கு வருமாறு போலீசார் தான் வலியுறுத்தினர்.

இருக்கைகள்
வாங்கடே ஸ்டேடியத்தில் கடந்த மே மாதம் 30ம் தேதி ஐபிஎல் போட்டி நடந்தபோது 35 ஏசி இருக்கைகள் மற்றும் 50 இருக்கைகளை தான் முன்பதிவு செய்திருந்ததாக ப்ரீத்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

விவரம்
மே 30ம் தேதி ஸ்டேடியத்தில் நடந்தவற்றை ப்ரீத்தி போலீசாரிடம் விளக்கியுள்ளார். மேலும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

நண்பர்கள்
ப்ரீத்தி போட்டி நடந்த அன்று தானும் தனது நண்பர்களும் அமர்ந்திருந்த இருக்கைகளை போலீசாருக்கு அடையாளம் காண்பித்துள்ளார். நெஸ் தன்னை திட்டி, அவமானப்படுத்தியதாக ப்ரீத்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

2 மணிநேரம்
மாலை 6.30 மணிக்கு தனது சகோதரருடன் ஸ்டேடியம் வந்த ப்ரீத்தி 2 மணிநேரமாக வாக்குமூலம் அளித்ததுடன் நடந்தவற்றை விவரித்துள்ளார்.

நெஸ்
ஐபிஎல் போட்டி நடந்த அன்று நெஸ் வாடியா தனது தாய் மவ்ரீன் மற்றும் உறவினர்களுடன் ஸ்டேடியம் வந்தபோது அவர்கள் முன்பதிவு செய்திருந்த இருக்கைகளில் ப்ரீத்தியின் நண்பர்கள் அமர்ந்துள்ளனர். வயதான தனது தாயை ப்ரீத்தி 20 நிமிடம் நிற்க வைத்தார் என்று நெஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீட் சண்டை
நெஸ் வாடியா ப்ரீத்தி இடையே இருக்கை தொடர்பான பிரச்சனை தான் இப்படி பூதாகரமாக வெடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











