அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார் நடிகை ப்ரீத்தி: நாளை வாக்குமூலம் அளிக்கிறார்

By Siva

மும்பை: தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் இருந்து இன்று மும்பை திரும்பினார்.

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது நெஸ் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கண்ட இடத்தில் தொட்டார் என்று புகார் கொடுத்த கையோடு அவர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.

இதனால் போலீசாரால் அவரிடம் வாக்குமூலம் வாங்க முடியவில்லை.

வாக்குமூலங்கள்

வாக்குமூலங்கள்

ப்ரீத்தி, நெஸ் வழக்கில் போலீசார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஊழியர் அன்கித் பால்டி உள்பட 8 பேரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். மே 30ம் தேதி அந்த சம்பவம் நடந்த பிறகு ப்ரீத்தி தன்னிடம் அது குறித்து தெரிவித்ததாக ஐபிஎல் சிஓஓ சுந்தர் ராமன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளித்தவர்கள் நெஸ் ப்ரீத்தியை திட்டி, தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடந்தபோது ப்ரீத்தி, நெஸ் வாடியா சண்டை முற்ற அதை சுந்தர் ராமன் தான் இடையே புகுந்து விலக்கிவிட்டுள்ளார்.

ப்ரீத்தி

ப்ரீத்தி

அமெரிக்கா சென்ற ப்ரீத்தி கடந்த வியாழக்கிழமை மாலையே இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் அவர் இன்று மதியம் தான் மும்பை வந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்த பத்திரிக்கைகாரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர் விருட்டென்று காரில் கிளம்பி தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

ப்ரீத்தி நெஸ் வாடியா விவகாரம் குறித்து நாளை போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கவிருக்கிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் போலீசார் நெஸ்ஸுக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X