மோடிக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ப்ரீத்தியை ஒதுக்கி வைத்த குடும்பத்தார்
மும்பை: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு ஆதரவுக்கு தெரிவித்து குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி போட்டியிடும் வாரனாசிக்கு சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் மோடியின் ரசிகை. அவர் வெற்றி பெற பிரச்சாரமே தேவையில்லை என்றார்.
இதையடுத்து ப்ரீத்தியை அவரது குடும்பத்தார் ஒதுக்கி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குடும்பம்
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ப்ரீத்தியின் குடும்பத்தார் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்கள். இந்நிலையில் ப்ரீத்தி மோடிக்கு ஆதரவாக பேசியது அவர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. அதனால் அவர்கள் ப்ரீத்தியை ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தாய்மாமா
ப்ரீத்தியின் தாய் மாமாவும், இமாச்சல் நகர்ப்புற வளர்ச்சி ஆணைய துணை தலைவருமான யஷ்வந்த் சஜ்தா அம்மாநில முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான வீரபத்திர சிங்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுப்பு
ப்ரீத்தி மோடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அவரது தாய் நீல்பிரபா ஜிந்தா கூறுகையில், என் மகள் என்னுடன் பனாரஸில் இருந்தார். அவர் மோடி பற்றி பேசவில்லை. அவர் மக்களை வாக்களிக்குமாறு தான் கூறினார் என்றார்.

ட்வீட்
குடும்பத்தாரின் பகையை சம்பாதித்துக் கொண்ட ப்ரீத்தி சுதாரித்துக் கொண்டு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் எந்த அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்வில்லை. நான் தனிப்பட்ட முறையில் வாரனாசி சென்றேன். அங்கு மீடியா ஆட்கள் என்னை பார்த்ததும் பல கேள்விகள் கேட்டனர் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











