ஷாக்கிங்.. அந்த இளம் நடிகை மீது கை வைத்த பாலா.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. குமுறிய நடிகை!

சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியானது. அதைப் பார்த்து ரசிகர்கள் அப்படியே பிதாமகன் படத்தின் காப்பி போலவே உள்ளதாக விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில், வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா தன்னை அடித்து துன்புறுத்தியதாக பிரேமலு படத்தின் ஹீரோயின் மமிதா பைஜு பேசி இருப்பது அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

சியான் விக்ரம் நடித்து வெளியான சேது படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பாலா. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நந்தா, பிதாமகன் படங்களில் சூர்யா மற்றும் சீயான் விக்ரம் நடித்தனர். ஆனால், அதன் பின்னர் பாலா இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்க மறுத்து விட்டனர்.

Premalu heroine Mamitha Baiju opens up Director Bala hits her on Vanangaan sets

விலகிய அஜித்: நான் கடவுள் படத்தில் முதலில் அஜித் நடிக்க இருந்த நிலையில், காசிக்கு அழைத்துச் சென்று பாலா கொடுத்த டார்ச்சர் காரணமாக உடனடியாக அந்த படத்திலிருந்து அஜித் விலகிவிட்டார். அதன் பின்னர் ஆர்யா அந்த படத்தில் நடித்து இருந்தார். நான் கடவுள் படத்தை தொடர்ந்து மீண்டும் ஆர்யா பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து விஷாலும் நடித்திருந்தார். பரதேசி படத்தில் அதர்வா நடித்திருந்த நிலையில், பாலா நடிகர்களை அடித்து துன்புறுத்துவதாக மேக்கிங் வீடியோக்கள் லீக்காகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

மறுக்கும் முன்னணி நடிகர்கள்: சசிகுமாரை வைத்து தாரை தப்பட்டை படத்தை இயக்கிய பாலா அதன் பின்னர் ஜிவி பிரகாஷை வைத்து நாச்சியார், துருவ் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால் அந்த படம் துருவ் விக்ரமுக்கு பிடிக்காத நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவின் உதவி இயக்குநர் கிரிசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா என அந்த படத்தை மறுபடியும் ரீமேக் செய்து நடித்தார்.

Premalu heroine Mamitha Baiju opens up Director Bala hits her on Vanangaan sets

சூர்யா விலகல்: வணங்கான் படத்தில் முதலில் சூர்யா கமிட்டான நிலையில், கன்னியாகுமரி கடற்கரையில் நடிகர் சூர்யாவை பலரது முன்னிலையில் பாலா திட்டினார் என்றும் வெறும் காலில் வெயிலில் நான்கு நாட்கள் ஓடவிட்ட நிலையில் பாலா மற்றும் சூர்யாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அதன் பின்னர் இனிமேல் இந்த படத்தில் தொடர முடியாது என சூர்யா விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

மமிதா பைஜுவை அடித்த பாலா: இந்நிலையில், சூர்யாவுடன் நடிகை க்ரித்தி ஷெட்டி அந்த படத்தில் நடித்து வந்தார். மேலும், பிரேம் படத்தின் நாயகி மமிதா பைஜு இன்னொரு ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஒரு நாள் பாலா தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சூர்யா சார் படத்தை விட்டு வெளியேறிய நிலையில், தானும் அந்த படத்திலிருந்து விலகி விட்டதாக சமீபத்திய பேட்டியில் மமிதா பைஜு பகிரங்கமாக உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.

Premalu heroine Mamitha Baiju opens up Director Bala hits her on Vanangaan sets

100 கோடி வசூல்: இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக வெளியான பிரேமலு திரைப்படம் உலக அளவில் 70 கோடி வசூல் ஈட்டியுள்ளது. விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்தின் நாயகி மமிதா பைஜு வை பாலா தாக்கியதாக அவர் அளித்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பாலாவை கண்டபடி திட்டி வருகின்றனர்.

திட்டும் ரசிகர்கள்: படத்தில் விலங்குகள் கூட துன்புறுத்தக் கூடாது என டைட்டில் கார்டு போடுகின்றனர். ஆனால் நடிகர் நடிகைகளை பாலா எப்படி அடித்து துன்புறுத்தலாம் என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சூர்யா அதனால் தான் படத்திலிருந்து விலகி இருப்பார் என்றும் பாவம் அருண் விஜய் மற்றும் ரோஷினி பிரகாஷ் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், இயக்குநர் சங்கம் பாலா போன்ற இயக்குநர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X