அப்போ சன்னி லியோன்.. இப்போ பிரேமம் நாயகி.. பீகார் மாநில ஆசிரியர் தேர்வில் அனுபமா ஆல் பாஸாம்?

சென்னை: பீகார் மாநிலத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தேர்வாகி உள்ளதாக வெளியான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Anupama Parameshwaran புகைப்படம் கொண்ட Mark List | Biharல் பரபரப்பு

நல்லா தானே நடிச்சுட்டு இருக்கேன்.. நான் ஏன் பீகாரில் போய் டீச்சர் வேலை பார்க்க வேண்டும் என இந்நேரம் நடிகை அனுபமா பரமேஸ்வரனே ஷாக் ஆகி இருப்பார்.

ஏற்கனவே நடிகை சன்னி லியோனை பீகார் கல்லூரி மாணவர் சேர்க்கை பட்டியலில் டாப்பராக்கி பண்ணிய மிஸ்டேக் வைரலானது குறிப்பிடத்தக்கது.

அவசர ஆபரேஷன்.. இதய பிரச்சனையால் போராடும் 2 வயது சிறுவன் தேவனேஷி.. சீக்கிரம் உதவுங்களேன்!

மலர் டீச்சர்னா கூட ஓகே

மலர் டீச்சர்னா கூட ஓகே

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி என்றால் கூட மனதை தேற்றிக் கொள்ளலாம். ஆனால், பள்ளி மாணவியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் பாஸ் ஆகிவிட்டார் என வேறு ஒரு மாணவரின் மார்க் ஷீட்டில் அனுபமாவின் போட்டோ ஒட்டிய அட்மிட் கார்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாவம் ரிஷிகேஷ்

பாவம் ரிஷிகேஷ்

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த STET (State Teacher Eligibility Test) தேர்வில் ரிஷிகேஷ் என்பவரின் தேர்வு அறிவிப்பில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் வெளியாகி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. விரைவில் அனுபமா அதை பார்த்து விட்டு பீகாருக்கு கிளம்பி ஆசிரியராக போகிறார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே சன்னி லியோன்

ஏற்கனவே சன்னி லியோன்

பீகார் மாநிலத்தில் கல்விச் சூழல் படு மோசமாக இருப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சியினர் புகார்களை அடுக்கி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே போல தான் நடிகை சன்னி லியோன் ஒரு கல்லூரியின் மாணவர் சேர்க்கைப் பட்டியலில் டாப்பர் லிஸ்ட்டில் இடம்பெற்று இருந்தது சன்னி லியோனையும் சேர்த்தே அதிர்ச்சியடைய வைத்தது.

அப்கிரேட் ஆகிறேன்

அப்கிரேட் ஆகிறேன்

சமீபத்தில் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன், படு கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "All I do is upgrade... what about you?" என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அவரது அந்த ட்வீட்டுக்கு கீழே அனுபமா ரசிகர்கள் பலரும் அந்த ரிசல்ட் போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.

ரொம்ப தள்ளிப் போகுதே

ரொம்ப தள்ளிப் போகுதே

தமிழில் நடிகர் அதர்வா உடன் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்த தள்ளிப் போகாதே படமும் கொரோனா லாக்டவுன் காரணமாக ரொம்பவே தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஒடிடியில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் விரும்பவில்லை. தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X