அடை மழையில் நனைய வைத்த அனுபமா பரமேஸ்வரன்.. உச்சுகொட்டி ரசிக்கும் ரசிகாஸ்!

சென்னை : நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டாக பாட்டுப்பாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் அசத்தி வரும் இவர் கொடி படத்திற்கு பிறகு அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே படத்தில் நடித்திருந்தார்.

ஓரிரு படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் அனுபமா.

அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத் திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வந்த காலம் மாறி இப்பொழுது மலையாள மொழியிலேயே வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் மலையாள மொழியில் உருவாகி இருந்தாலும் தமிழில் சக்கைப்போடு போட்டு 100 நாட்களை கடந்து வசூல் சாதனை படைத்தது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

நிவின் பாலி ஹீரோவாக நடிக்க அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரேமம் திரைப்படம் பள்ளி காலத்தில் நிவின் பாலி காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படம் மலையாளத்தை விட தமிழில் வெற்றி பெற்றதால், அனுபமாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இங்கேயும் உருவானது.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

பிரேமம் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்த அனுபமா தமிழில் கொடி படத்தில் அறிமுகமானார்.தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்தில் த்ரிஷா நெகட்டிவ் ரோலில் அசத்தியிருப்பார். அனுபமா வழக்கம்போல க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். படம் வெற்றி பெற்ற போதும், அனுபமாவுக்கு தமிழில் எந்த வாய்ப்பும் வரவில்லை.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

இதையடுத்து, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் ஜோடி போட்டுள்ளார். இப்படம், தெலுங்கில் நானி நடித்த நின்னுக்கோரி படத்தின் ரீமேக்காகும் இப்படம் வெற்றி பெறவில்லை. தற்போது சிரேன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

அடை மழையில் நனையவைத்த அனுபமா

நடிப்புக்கு தகுந்தவாறு அளவான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், எனக்கு நடிப்பு மட்டுமில்லை பாடவும் வரும் என்பதை பாட்டுப்பாடி நிரூபித்துள்ளார். மின்னலே படத்தில் வரும் வசீகரா பாடலை அழகாக பாடி உள்ளார். இந்த பாடலை கேட்ட ரசிகாஸ், உங்களின் வசீகரமான குரலால், அடைமழை வராமலே நனைந்துவிட்டோம் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X