பிரேம்ஜி என் காதலரா? அவர் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான்.. மனம் திறந்த சோனா!
சென்னை: கவர்ச்சி நடிகை சோனா, தற்போது தன் வாழ்க்கை வரலாறு கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் எடுத்து வருகிறார். வெப் தொடரை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வரும் சோனா, யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில், இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், பிரேம்ஜி எனக்கு சகோதரர், நண்பர், பெஸ்டி, காதலர் என என்ன உறவு வேண்டுமானாலும் சொல்லாம். ஏன்னெறால், பிரேம்ஜி எனக்கு மிகவும் ஸ்பெஷலானவர். அப்படி சொல்வதற்கு காரணம், நாங்கள் காதலித்தோம் என்று அர்த்தமில்லை. இன்று வரை அவர் என்னை பார்த்தால 'புரொடூசர் மேடம்' என்று தான் அழைப்பார். படப்பிடிப்பில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் என்னை அமைதிப்படுத்தும் நபராக பிரேம்ஜி இருந்தார்.

பிரேம்ஜி ஸ்பெஷலாரானவர்: என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான நேரங்களில் என்னை என் கூட இருந்து சமாதானப்படுத்துவார். வெளியுலகில் அவர் எப்படி இருந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், எனக்காக எப்போதும் அக்கறை கொண்ட நண்பராகவே இருந்தார். அதாவது, ஒரு நண்பர்கள் குழுவில் அனைவரும் சரக்கு அடித்துவிட்டு ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கும் போது, ஒருவர் மட்டும் தெளிவாக இருந்து மற்றவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஒரு நண்பர் இருப்பார். அதுபோன்ற ஒருவர் தான் பிரேம்ஜி. என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளிலிருந்து என்னை காப்பாற்றிய அவர் தான். ஆனால் நாங்கள் காதல் இருந்ததாகவும், அதனால்தான் பிரேம்ஜி 45 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்றும் பரவி வரும் தகவல்களை மறுத்த சோனா, அவை அனைத்தும் சினிமா துறையில் வழக்கமாக பரவும் வதந்திகளே தவிர உண்மை இல்லை என்று சோனா தெளிவுப்படுத்தினார்.

விக்னேஷ் சிவன் மறந்துவிட்டார்: கடந்த வாரம் சோனா அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவன் பற்றி பேசி இருந்தார். அதில், என் அலுவலகத்தில் தான் 3 ஆண்டுகள் பணியாற்றினார். நிறைய வொர்க் போய் கொண்டிருந்தது. அப்போது திடீரென நயன்தாராவை சந்தித்து 'நானும் ரவுடிதான்' படத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் அப்படியே போயிட்டார். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, எந்தவித தொடர்பும் இல்லை, நல்ல நண்பர்களாக இருந்து, சூப்பரான ஒரு டீம் இருந்தும் விக்னேஷ் சிவன் விட்டுப்போனது வருத்தம். நல்லா இருக்கப்போகிறாய் என்றால் சந்தோஷம் பட்டுத்தான் இருப்பேன். ஆனால் அப்படியே கட் பண்ணிட்டு போனது தான் வருத்தம் என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications