»   »  கொத்தலோ பிரியா மணி!

கொத்தலோ பிரியா மணி!

Subscribe to Oneindia Tamil

பிரியா மணியின் முகம் இன்னும் கொஞ்ச நாளில் மறந்து விடும் போல. அந்த அளவுக்கு தலைமறைவாகஇருக்கும் பிரியா மணி தெலுங்கில் ஒரு சூப்பர் படத்தில் நடித்து வருகிறார்.

பெல்லாய்னா கொத்தலோ என்பது தான் படத்தின் பெயர். ஜெகபதி ராஜுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்பிரியா மணி. படம் முழுக்க பிரியாவின் கிளாமர் படு கூல் ஆக இருக்கிறதாம். பின்னி பெடலெடுத்து வரும்பிரியா, தமிழில் தகப்பன்சாமி படத்தில் ரொம்ப நாளாக நடித்து வருகிறார்.

அத்தோடு பருத்தி வீரனிலும், பாவாடை, தாவணியில் திறமையைக்காட்டி வருகிறார்.பெல்லாய்னா கொத்தலோ படத்தில் பிரியாவுக்கு சூப்பர் வேடமாம். இதில் அவருடைய நண்பராக வருகிறார்டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம். கிளாமருடன் கூடிய நடிப்பில் கலக்கி வருகிறாராம் பிரியா மணி.

தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அங்கும் இங்கும் அலை பாய்ந்த பிரியா இப்போது தெலுங்கில்மையம் கொண்டுள்ளார். இங்கு தனது கிளாமர் அலையால் மணவாடுகளை அசத்திப்படு வேகம் எடுத்து நடித்துவருகிறார் பிரியா மணி. கொத்தலோ அதற்கு சரியானகளமாக அமைந்துள்ளதால் சந்தோஷமாக நடித்து வரும்பிரியாமணி, மலையாளத்திலும் தீவிர கவனம் செலுத்துகிறார்.

பிரியா தவிர ஆஸ்தாசிங் கால் என்ற சிலுசிலு தேவதையும் இப்படத்தில் இருக்கிறார். இவரும் கிளாமரில்மிளிர்ந்து வருகிறாராம். இருவரது கிளாமரும் சேர்ந்து படத்திற்கு பெரும் பலமாக இருப்பார்கள் என இயக்குநர்பெத்த நம்பிக்கையில் இருக்கிறார்.

ஹைதராபாத்தில் இப்போது ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. இரண்டு பாடல்களை சுட்டுவிடடார்களாம். அடுத்து செபடம்பர் 8ம் தேதி முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.

Read more about: priya mani in telugu movie
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil