கண்ணப்பாவுல கண்கொள்ளா காட்சியா இருக்கே.. ஸ்டார் பட ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தனா இப்படி?.. தாராளம்!
சென்னை: முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்துள்ள கண்ணப்பா படத்தின் "தனிமை என் தனிமை" பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஒரு பக்கம் கெத்திகா ஷர்மாவின் அதித சர்ப்ரைஸு பாடலின் ஹூக் ஸ்டெப் டிரெண்டாகி வரும் நிலையில், ப்ரீத்தி முகுந்தனின் அழகை இன்னொரு பக்கம் ரசிகர்கள் ஆராதித்து வருகின்றனர்.
அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் என ஏகப்பட்ட பான் இந்தியா நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா திரைப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஸ்டார் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி முகுந்தன் இந்த படத்தில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக கவர்ச்சி பொங்க நடித்து இளைஞர்களை இம்சைப்படுத்தி வருகிறார். அவரது நடன அசைவுகளையும் ஸ்லீவ்லெஸ் ஆதிவாசி உடையையும் பார்த்து ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.
பிரபுதேவா கொரியோகிராஃபி: கண்ணப்பா படத்தின் படப்பிடிப்பு 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக நியூசிலாந்தில் படமாக்கப்பட்டது. தனது மகன் விஷ்ணு மஞ்சுவை பிரபாஸ் போல பான் இந்தியா ஹீரோவாக மாற்ற ஏகப்பட்ட கேமியோக்களை நிரப்பி இந்த படத்தை மோகன் பாபு தயாரித்துள்ளார். மேலும், பிரபுதேவா இந்த பாடலுக்கு கொரியோகிராஃபி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து பிருந்தா மாஸ்டரும் பணியாற்றியுள்ளார்.
ப்ரீத்தி முகுந்தன் கொள்ளை அழகு: அருவியில் இருந்து குளித்து முடித்துவிட்டு அப்படியே ஈரத்துணியுடன் வரும் ப்ரீத்தி முகுந்தனை ஏணி மீது ஏறி நின்று கூரையை சரிசெய்துக் கொண்டிருக்கும் விஷ்ணு மஞ்சு இறங்கி வந்து லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சிகள் எல்லாம் லிரிக் வீடியோவில் இடம்பெற்று ரசிகர்களின் உணர்ச்சிகளை இஷ்டத்துக்கு தூண்டியுள்ளன. பாடல் முழுவதும் மட்டுமின்றி படம் முழுவதுமே ப்ரீத்தி முகுந்தனுக்கு கண்ணப்பா படத்தில் இதுபோன்ற உடை தானா என்றும் இது கண்கொள்ளா காட்சியாக இருக்கே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கட்டிப்புடிச்சு கன்னா பின்னா டான்ஸ்: "தனிமை என் தனிமை" என பாடல் மெலோடியாக சென்றாலும் இருவரும் செய்யும் ஆக்ஷன் எல்லாம் எக்குத்தப்பாகவே உள்ளது. பிரபுதேவா கொரியோகிராஃபி என்றால் சொல்லவா வேண்டும் என்பது போல கவர்ச்சிக்கும் கட்டிப்பிடித்து உரசி நடனமாடுவதற்கும் கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் பாடலை உருவாக்கியுள்ளனர். அதிலும், கடைசியில் மரத்தில் இருந்து இருவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து வரும் காட்சிகள் எல்லாம் கண்டிப்பாக ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுத்து வந்துவிடும் என்றே தெரிகிறது.
பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்குமா?: தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ஹனுமான் திரைப்படம் 300 கோடி வசூல் ஈட்டிய நிலையில், கண்ணப்பா திரைப்படத்தை பெரிதும் நம்பி உருவாக்கியுள்ளனர். பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தால் தான் வெற்றி பெறும் என்கின்றனர். அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், காஜல் அகர்வாலின் கேமியோ அதற்கு உதவுமா? என்பது அடுத்த மாதம் படம் வெளியானதுமே தெரிந்துவிடும். கதை மற்றும் திரைக்கதை சரியாக அமைந்துவிட்டால் சாவ்வா படம் போல 500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை கூட அள்ளும்.


Click it and Unblock the Notifications











