ஸ்லிம் லுக்கில் பாலிஷ் போட்ட பப்பாளியாக மாறிய பிரியா மணி.. குவியும் லைக்குகள்!

சென்னை : தேசிய விருது அறிவிக்கப்பட்ட அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகி வர அதில் கதாநாயகியாக நடிகை பிரியாமணி நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்த மைதான் திரைப்படத்தில் அவருக்கு பதிலாக நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படங்களில் அடுத்த ரவுண்டு வர தயாராக இருக்கும் பிரியாமணி இப்பொழுது பாலிஷ் செய்த பப்பாளி போல சும்மா தகதகன்னு மின்னும் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தத்தளிக்க விட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டார்

தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டார்

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை பிரியாமணி அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து சிறந்த கதாநாயகியாகவும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டார். அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா ,ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என இவர் நடித்த பல படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

துணை கதாபாத்திரங்களில்

துணை கதாபாத்திரங்களில்

குறிப்பாக பருத்திவீரன் திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். அதில் இவரது முத்தழகு கதாபாத்திரம் அனைவராலும் கவரப்பட்டு இன்று வரை பலரும் இவரை முத்தழகு என அழைத்துவருமளவிற்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ராவணன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருப்பார். இந்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் தி பேமிலி மேன் 2லும் இவர் நடித்துள்ளார்.

மீண்டும் தமிழ் படங்களில்

மீண்டும் தமிழ் படங்களில்

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் தமிழில் வெளியாகி தற்போது தேசிய விருதை வென்றுள்ள அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி நடித்து வரும் இவரை மீண்டும் தமிழ் ரசிகர்கள் படங்களில் காண ஆவலுடன் உள்ளனர். நீண்ட காலமாக தமிழில் நடிக்காமல் இருந்த பிரியாமணி இப்பொழுது அறிமுக இயக்குனர் இயக்கும் கொட்டேஷன் கேங்க் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 ஸ்லிம் லுக்கில்

ஸ்லிம் லுக்கில்

நடிகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள பிரியாமணி அணிந்த காஸ்ட்யூமில் எடுத்த புகைப்படங்களை இப்பொழுது பதிவிட்டுள்ளார். அதில் சும்மா பாலிஷ்செய்த பப்பாளி பழம் போல தகதகவென மின்னும் இவர் முன்னழகு பின்னழகு என மொத்தமும் தெளிய கருப்புநிற சிங்கிள் பீஸ் உடையில் தெறிக்கவிடும் லுக்கில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ள இந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X