மீண்டும் மீரா - பிருத்விராஜ்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிருத்விராஜும், மீரா ஜாஸ்மினும் இணைந்து நடிக்கவுள்ளனர். இருவரும் மீண்டும் இணையும் படம் போஸ்.
ஒரு காலத்தில் பிருத்விராஜும், மீரா ஜாஸ்மினும் விழுந்து விழுந்து காதலித்தது மலையாளத் திரையுலகில் ரொம்பப் பிரசித்தமானது.
இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூட ஒரு கட்டத்தில் அறிவித்தனர். ஆனால் திடீரென பிருத்விராஜை விட்டுப் பிரிந்தார் மீரா. அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.
அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளனர். மலையாளத்தில் உருவாகும் போஸ் படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி போடுகிறார்கள்.
இப்படத்தை பத்மகுமார் இயக்குகிறார். ஏ.கே.சாஜன் திரைக்கதை அமைக்கிறார். சாய்குமார், ஜெகதி, மனோஜ் கே.ஜெயன் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள்.
மீண்டும் மீராவுடன் இணைவது குறித்து பிருத்விராஜ் கூறுகையில், மீராவுடன் எனக்கு எப்போதுமே பிரச்சினை இருந்ததில்லை. அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பது என்பது சந்தோஷமான விஷயம் என்றார்.
மீராவுடன் இணைய யாருக்குத்தான் கசக்கும்!


Click it and Unblock the Notifications











