அமெரிக்காவுக்கு சென்றபோது தான் ஏதோ நடந்துவிட்டது: ஹன்சிகா வருத்தம்
Recommended Video

சென்னை: தனது அந்தரங்க புகைப்படங்கள் கசிந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஹன்சிகா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து தனது ட்விட்டர் மற்றும் செல்போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக ஹன்சிகா ட்வீட் செய்தார்.
மார்க்கெட் டல் அடித்துள்ளதால் ஹன்சிகாவே புகைப்படங்களை கசியவிட்டதாக பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

செல்போன்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது என் செல்போனில் பிரச்சனை ஏற்பட்டது. அதன் பிறகு தான் என் அந்தரங்க புகைப்படங்கள் கசிந்துள்ளன. அது குறித்து அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்கிறார் ஹன்சிகா.

ஹேக்
நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் அவை. அதை யாரோ ஹேக் செய்து கசியவிட்டுள்ளனர். விளம்பரம் தேட நானே என் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதாக சிலர் கூறுவது வேதனை அளிக்கிறது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

ஹன்சிகா
என் அந்தரங்க புகைப்படங்கள் கசிந்தது குறித்து சிலர் தெரிவித்துள்ள கருத்துகள் என்னை காயப்படுத்தியுள்ளன. என் செல்போன், ட்விட்டரை ஹேக் செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்று ஹன்சிகா கூறியுள்ளார்.

விளம்பரம்
புகைப்படங்களை கசியவிட்டு நான் ஏன் விளம்பரம் தேட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹன்சிகா. அந்த புகைப்படங்கள் வெளியானதில் இருந்து ஹன்சிகாவின் படங்களை விட அது குறித்து தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











