»   »  பிய்த்து மேய வரும் பிரியா!

பிய்த்து மேய வரும் பிரியா!

Subscribe to Oneindia Tamil

புலன் விசாரணை 2ம் பாகம் நாயகி பிரியாவுக்கு புதுப் பட வாய்ப்பு நிறையவருகிறதாம்.

ரொம்ப காலத்துக்கு முன்பு விஜயகாந்த்தை வைத்து வெளியான படம் புலன்விசாரணை. இதை மறுபடியும் புலன் விசாரணை பாகம் 2 என்ற பெயரில்உருவாக்குகிறார்கள். பிரஷாந்த் தான் ஹீரோ. ஹீரோயினாக நடிப்பவர் பிரியா.

பளபளவென இருக்கும் பிரியாவுக்கு முதல் படம் உருவாகி, வெளியாகும் முன்பேபுதுப் பட வாய்ப்புகள் பிய்த்துக் கொண்டு வர ஆரம்பித்துள்ளதாம்.

கோழிக்கோடு கேரட்டும், பெங்களூர் தக்காளியும் பார்த்துப் பொறாமைப்படும்அளவுக்கு ஜாங்கிரி கணக்கில் குளுகுளுவென இருக்கும் பிரியாவுக்கு முதல் படத்தில்நடித்து வெளியே வருவதற்கு முன்பே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதால்ஜாலியாகியுள்ளார்.

தூத்துக்குடி, அச்சமில்லை ஆகிய படங்களின் நாயகன் ஹரிக்குமாரின் திருத்தம் என்றபடத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். இந்தப் படத்தில்இரண்டு ஹீரோயின்களாம். ஒருவராக பிரியா நடிக்கவுள்ளார். இன்னொருஹீரோயினாக பிரியங்காவைக் கேட்டிருக்கிறார்கள்.

பிரியங்காவும் லேசுப்பட்டவர் இல்லை. வெயில் படத்தின் மூலம் ஓவர்நைட்டில்புகழுக்குப் போய் விட்டவர் பிரியங்கா. அதில் பசுபதியுடன் சேர்ந்து நடித்தவர்தான்பிரியங்கா.

இந்த படங்கள் தவிர அன்றில் பறவைகள் என்ற புதிய படத்திலும் நடிக்கவுள்ளாராம்பிரியா. இதில் திறமை காட்டும் இன்னொருவர் லக்ஷா. லகலக கிளாமரில் பின்னிஎடுப்பவர் லக்ஷா. இந்தப் படத்தில் அவருக்கு என்ன மாதிரியான வேலை இருக்கும்என்பதை சொல்லித் தெரிவிக்க வேண்டியதில்லை.

பிரியா காட்டில் பெய்ய ஆரம்பித்த தூறல் மழை இப்போது பெரு மழையாக மாறிபிய்த்து வாங்க ஆரம்பித்து விட்டது. அடுத்த அழகுப் போட்டியாளர் ரெடி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil