ப்ரியா ஆனந்த்துக்கு இந்த வருஷம்தான் ரொம்ப 'ஹேப்பி பர்த் டேட'வாம்!

By Shankar

தோல்விப் பட நாயகி என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுவிட்ட நடிகைகள் பின்னர் ஓஹோ என்று கோலோச்சுவது தமிழ் சினிமாவில் புதிசில்லை.

அதற்கு சமீபத்திய உதாரணம் ப்ரியா ஆனந்த். கடந்த ஆண்டு வரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த நடிகைக்கு இப்போது சுக்கிர தசை உச்சத்தில்.

வாமணன்

வாமணன்

வாமணன் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக 2009-ல் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். தமிழகத்தில் பிறந்து தமிழை தாய் மொழியாகக் கொண்ட பக்கா தமிழ் நடிகை. ஆனால் முதல் படமே படுதோல்வியைச் சந்தித்தது. அடுத்த படம் புகைப்படம். அந்தப் படம் அவுட்.

லீடர்

லீடர்

அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்ததால் தெலுங்குப் பக்கம் போனார். லீடர் படத்தில் நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்றதால் தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் வந்தன.

இங்கிலீஷ் விங்கிலீஷ்

இங்கிலீஷ் விங்கிலீஷ்

தமிழிலும் முயற்சியைக் கைவிடாத ப்ரியா ஆனந்துக்கு 180 என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதன் தெலுங்குப் பதிப்புக்கும் இவரே நாயகி. படம் சுமாராகப் போனது. தொடர்ந்து இங்கிலீஷ் விங்கிலீஷில் ஸ்ரீதேவியுடன் நடிக்க வாய்ப்பு. அந்தப் படத்தில் இவரது பாந்தமான நடிப்பு பேசப்பட்டது.

எதிர்நீச்சல் தந்த வெற்றி

எதிர்நீச்சல் தந்த வெற்றி

ப்ரியா ஆனந்துக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது எதிர்நீச்சல். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி அவரை தமிழில் முன்னணி நடிகை ஆக்கியுள்ளது.

வணக்கம் சென்னை

வணக்கம் சென்னை

தொடர்ந்து வணக்கம் சென்னை, வை ராஜா வை, இரும்புக் குதிரை, அரிமா நம்பி என பெரிய படங்களில் நாயகியாக நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இன்று ப்ரியா ஆனந்துக்கு பிறந்த நாள். இதற்கு முன் எத்தனையோ பிறந்த நாள்களைக் கொண்டாடிய போதிலும், இந்த பிறந்த நாள்தான் அவர் மனதுக்கு நிறைவாக உள்ளதாம். வெற்றிப் பட நாயகியாக பிறந்த நாள் கொண்டாடுவது யாருக்கும் சந்தோஷமாகத்தானே இருக்கும் என்கிறார் ப்ரியா.

இன்று சென்னையில் தன் பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X