யாரையும் காதலிக்கவில்லை... பெற்றோர் பார்க்கும் பையனையே மணப்பேன்- ப்ரியா ஆனந்த்

By Shankar

சென்னை: தான் சினிமாவில் யாரையும் காதலிக்கவில்லை என்றும், பெற்றோர் பார்த்து வைக்கும் பையனை மணக்கப் போவதாகவும் ப்ரியா ஆனந்த் கூறினார்.

ஒரு நேரத்தில் ராசியில்லாத முத்திரை குத்தப்பட்ட நடிகைகளுள் ஒருவர் ப்ரியா ஆனந்த். ஆனால் இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்குப் பிறகு அவர் முன்னணி இளம் நடிகைகளுள் ஒருவராகிவிட்டார்.

5 படங்கள்

5 படங்கள்

இப்போது ‘வை ராஜா வை', ‘அரிமா நம்பி', ‘இரும்புக் குதிரை', ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா', ‘பொடியன்' என ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியிலும்

இந்தியிலும்

இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் இந்தியிலும் படங்கள் நடிக்கிறார். எந்தப் பிரச்சினையும் இல்லாத இளம் நடிகை என்ற பெயரை அனைத்து இயக்குநர்களிடமும் அவர் பெற்றிருப்பதுதான் அவரது ப்ளஸ்.

கவர்ச்சி

கவர்ச்சி

கதைக்குத் தேவையான பாத்திரமென்றால் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என்ற பழம்பெரும் சினிமா தத்துவத்தை ப்ரியா ஆனந்தும் தவறாமல் கடைப்பிடிக்கிறார்.

கவர்ச்சி குறித்து அவர் கூறுகையில், "கவர்ச்சி என்பது உடம்பிலும், ஆடைகளிலும் இல்லை. நடிப்பில் தான் இருக்கிறது," என்கிறார்.

கவுதம் கார்த்திக்குடன்

கவுதம் கார்த்திக்குடன்

எனக்கு பிடித்த நடிகை ஸ்ரீதேவி. என்னுடன் நடித்த, நடிப்பவர்களில் கவுதம் கார்த்திக் பிடித்தமானவர். எனக்கு உண்மையில் கார்த்திக்குடன் நடிக்க ஆசைாக உள்ளது.

காதலிக்கவில்லை

காதலிக்கவில்லை

நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி வந்த எந்த செய்தியிலும் உண்மையில்லை. என்னுடன் நடிக்கும் பல நடிகர்கள் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சினிமா பார்ட்டிகளுக்கு செல்வது இல்லை.

திருமணம்

திருமணம்

எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன். அவ்வளவுதான் திருமணம் குறித்த எனது திட்டம்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X