அவருடன் நடித்த ஸ்ரீதேவி, ரித்தீஷ் உயிருடன் இல்லை: கலாய்த்தவரை விளாசிய ப்ரியா ஆனந்த்
Recommended Video
சென்னை: ட்விட்டரில் தன்னை கிண்டல் செய்தவருக்கு நடிகை ப்ரியா ஆனந்த் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் நடிகர்கள், நடிகைகளை கடுமையாக விமர்சிப்பதும், கலாய்ப்பதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒருவர் நடிகை ப்ரியா ஆனந்த் மீது பழி போட்டு ட்வீட் செய்தார்.
அதை பார்த்த ப்ரியா அவருக்கு சரியான பதில் அளித்துள்ளார்.
ரித்தீஷ்
இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் ஸ்ரீதேவி, ப்ரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. எல்.கே.ஜி. படத்தில் ஜே.கே. ரித்தீஷ் ப்ரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே. ரித்தீஷ் இறந்துவிட்டார். ப்ரியா ஆனந்துடன் சேர்ந்து நடிப்பவர்கள் இறக்கிறார்கள். சக கலைஞர்களுக்கு கெட்ட ராசியின் அடையாளமா ப்ரியா ஆனந்த் என்று ஆணழகன் என்பவர் ட்வீட் செய்தார்.
பதில்
ஆணழகனின் ட்வீட்டை பார்த்த ப்ரியா ஆனந்த் கூறியிருப்பதாவது, நான் வழக்கமாக உங்களை போன்றவர்களுக்கு பதில் அளிப்பது இல்லை. ஆனால் நீங்கள் தெரிவித்த விஷயம் மோசமானது என்பதை உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். உங்களை நான் பதிலுக்கு தரக்குறைவாக பேச மாட்டேன் என்கிறார்.
ட்விட்டர்
உங்கள் ட்விட்டர் கணக்கின் பெயர் அன்பு என்று உள்ளது. அது உங்களுக்கு ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அன்பு என்கிற ஒரு விஷயத்தால் மட்டுமே இந்த உலகம் இயங்குகிறது என்கிறார் ப்ரியா ஆனந்த்.
நெட்டிசன்
சாரி. என் தவறை உணர்ந்துவிட்டேன். இன்று நான் எல்.கே.ஜி. மற்றும் இங்கிலிஷ் விங்கிலிஷ் பார்த்தேன். இரண்டு படங்களிலும் நீங்கள் நடித்திருந்ததால் அந்த கேள்வி எழுந்தது. அதனால் அப்படியே ட்வீட் செய்தேன். நீங்கள் ட்வீட்டுகளை பார்க்க மாட்டீர்கள் என்று நினைத்தேன். உங்களை காயப்படுத்தியதற்கு சாரி என்று அந்த நெட்டிசன் மன்னிப்பு கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











