படப்பிடிப்பை பார்க்கத் திரண்ட கூட்டம்... ரசிகர்களிடம் சிக்கிய ப்ரியா ஆனந்த்
மயிலைடுறையில் படப்பிடிப்புக்காக வந்த நடிகை ப்ரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித் திணறிார்.
'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று நடைபெற்றது. இது ஒரு பாடல காட்சி.

ஒரு லட்சம் பேர்
விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்தனர். படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரயில் நிலையம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்து இருந்தார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் கூடிவிட்டார்கள்.

கூச்சல்
படப்பிடிப்பைத் தொடர முடியாத அளவுக்கு ரசிகர்கள் பெரும் கூச்சல் எழுப்பியபடி இருந்தனர். ப்ரியா ஆனந்த், சூரி ஆகியோரை ஏகத்துக்கும் கிண்டல் கேலி செய்தபடி இருந்தனர்.

கையைப் பிடித்து இழுத்து
உடனே ப்ரியா ஆனந்த் கேரவனுக்குள் செல்ல முயன்றார். அப்போது ரசிகர்கள் ப்ரியா ஆனந்தை மறித்து, ஆட்டோ கிராப் கேட்டனர். சிலர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். இன்னும் சிலர் அத்து மீறி கையை பிடித்து இழுத்து ரகளை செய்தார்கள்.

பயங்கர அனுபவம்
ப்ரியா ஆனந்த் கூட்டத்தில் சிக்கி தவித்தார். பாதுகாவலர்கள் சிரமப்பட்டு ரசிகர்கள் பிடியில் இருந்து ப்ரியா ஆனந்தை மீட்டு வேனுக்குள் அனுப்பி வைத்தனர். மறக்க முடியாக பயங்கர அனுபவம் இது, என்றார் பிரியா ஆனந்த்.
இருந்தாலும் ஒருவழியாரக சமாளித்து ஷூட்டிங்கை முடித்தார் கண்ணன்.


Click it and Unblock the Notifications











