ஓடிடியில் வெளியாகும் ஓ மணப்பெண்ணே... ப்ரியா பவானி சங்கர் மகிழ்ச்சி
சென்னை : நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகவுள்ளது ஓ மணப்பெண்ணே.
இந்தப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நாளைய தினம் வெளியாகவுள்ளது.
இதுகுறித்து படத்தின் நாயகி ப்ரியா பவானி சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பெல்லி சூப்புலு படம்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த படம் பெல்லி சூப்புலு. இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது. விஜய தேவரகொண்டா மற்றும் ரிது வர்மா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இந்தப்படம் வெளியானது.

ஓ மணப்பெண்ணே படம்
இந்நிலையில் தற்போது ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் இந்தப் படம் தமிழில் வெளியிடப்பட உள்ளது. படத்தில் ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றன.

ஓடிடியில் ரிலீஸ்
திரையரங்குகளில் தற்போது தொடர்ந்து படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நாளைய தினம் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் மகிழ்ச்சி
இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் விழா நடைபெற்றது. இதில் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுந்தர் தெலுங்கில் வெற்றி பெற்ற பெல்லி சூப்புலு படத்தின் இயல்பை குலைக்காமல் இந்தப் படத்தை எடுத்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம்
இந்தப் படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ள நிலையில், இதை தன்னுடைய படம் என்று பெருமையுடன் குறிப்பிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நாளைய தினம் ரிலீசாக உள்ளதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கலர்புல் ஜோடி
காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹரீஷ் மற்றும் ப்ரியா இருவரும் மிகவும் கலர்புல்லாக உள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரிலும் மிகவும் அழகான ரொமாண்டிக்கான ஜோடியை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க இவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











