தெலுங்கில் அறிமுகமாகும் பிரியா பவானி சங்கர்...யாருக்கு ஜோடி தெரியுமா?

சென்னை : நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக கைநிறைய திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில் இவர் கைவசம் அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் போன்ற படங்கள் உள்ளன. இதனால் பிசியான நடிகைகளின் பட்டியலில் பிரியாவும் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கலக்கி வந்த பிரியா பவானி சங்கர் தற்போது, தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக கலக்கிகொண்டு வருகிறார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, இப்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேயாதமான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் முறை பெண்ணாக நடித்திருந்தார்.

பல படங்கள் சைவசம்

பல படங்கள் சைவசம்

அதன்பின்னர், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் என பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றன. அருண் விஜய்க்கு ஜோடியாக யானை படத்திலும், திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷூக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

தெலுங்கில் முன்னணி நடிகருடன்

தெலுங்கில் முன்னணி நடிகருடன்

தமிழ் படங்களில் பிசியாக நடித்து வந்த ப்ரியா பவானி சங்கர், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கி வருகிறார். சரண் ராஜ் இசையமைப்பாளராகவும், மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றனர். சத்யதேவ்வின் 26வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

இந்தியன் 2 படத்தில்

இந்தியன் 2 படத்தில்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக இருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ரெட்ஜெய்ண்ட் நிறுவனம் தலையிட்டு லைகா நிறுவனத்துடனான பிரச்சனையை தீர்த்து வைத்ததால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X