ராஜஸ்தானே மலைக்கும் அழகியான பிரியா பவானி சங்கர்!
சென்னை: சின்னத்திரையிலிருந்து இப்பொழுது வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்
இந்தியன் 2,பத்து தல, ருத்ரன், யானை, ஹாஸ்டல், பொம்மை என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜஸ்தானுக்கு சென்ற இடத்தில் அங்கு எடுத்த அழகிய க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ளித்திரையிலும் கதாநாயகியாக
சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து குடும்ப பெண்களின் மனதில் இடம் பிடித்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்பொழுது வெள்ளித்திரையிலும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார் . இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான பிரியா பவானி சங்கருக்கு இப்பொழுது தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன.

மீண்டும் படப்பிடிப்பை தொடங்க
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது பின் பல்வேறு பிரச்சினைகளால் இப்பொழுது மீண்டும் படப்பிடிப்பை தொடங்க தாமதமாகி கொண்டுள்ளது

இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி
ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்த ஓமணப் பெண்ணே மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்தப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஓமணப் பெண்ணே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மீண்டும் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவனி சங்கர் புதிய திரைப்படத்தில் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படமும் காதல் கதையில் உருவாகிறது.

தாசில்தாராக நடிக்கிறார்
கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மஃப்டி தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் டானாக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் போலீஸ் அதிகாரியாக கௌதம் கார்த்திக் நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இதில் பிரியா பவானி சங்கர் தாசில்தாராக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
Recommended Video

ராஜஸ்தானே மலைக்கும் அழகி
யானை, பத்து தல,ருத்ரன்,பொம்மை, ஹாஸ்டல்,இந்தியன் 2 என அடுத்தடுத்த படங்கள் பிரியா பவானி சங்கருக்கு வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ராஜஸ்தானுக்கு சென்ற இடத்தில் அங்கு க்ளிக்கிய அழகிய க்யூட் புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராஜஸ்தானே மலைக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications