“ஹேப்பி பர்த்டே ராஜ் மாமா“… பிரியா பாவனி சங்கரின் ஸ்பெஷல் போஸ்ட் !

சென்னை : பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், தனது காதலரின் புகைப்படத்தை பகிர்ந்து வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரியா பவானி சங்கரின் காதலரை பார்க்கும் ஆர்வத்தில் அவரின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.

சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன், அருண் விஜய் ஜோடியாக யானை, அதர்வாவுடன் குருதி ஆட்டம், கமலின் இந்தியன் 2, தனுஷுடன் திருச்சிற்றம்பலம் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பிரியா பாவனி சங்கர்

பிரியா பாவனி சங்கர்

இன்ஜினியரிங் படித்து விட்டு, திரைத்துறையின் மேல் இருந்த ஆர்வத்தால் நியூஸ் சேனலில், செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் பிரியா பவானி சங்கர்.

மேயாதமான்

மேயாதமான்

இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான மேயாதமான் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே படம் வரை, அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்ததால் கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றுவிட்டார்.

பத்து வருட காதல்

பத்து வருட காதல்

இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை கடந்த பத்து வருடமாக காதலித்து வருகிறார். காதலருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பலமுறை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், காதலரின் பிறந்த நாளான இன்று அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே ராஜ் மாமா

ஹேப்பி பர்த்டே ராஜ் மாமா

பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், ஹேப்பி பர்த்டே ராஜ் மாமா...'நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பையன், தற்போது ஒரு அற்புதமான மனிதராக மாறி இருப்பதை நான் பார்த்து வருகிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எப்பொழுதும் புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, ஆசீர்வாதம், அமைதி, ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவு செய்துள்ளார். மேலும், பின் குறிப்பாக, இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும், அதனால் தான் இதை நான் பதிவு செய்துள்ளேன் என்றும் பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X