முக்கடல் சங்கமம், மக்கள், சாப்பாடு எல்லாம் சூப்பர்... பிரியா பவானி சங்கர் குஷி!

கன்னியாகுமரி : நடிகை பிரியா பவானி சங்கர் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக பத்து தல படத்திற்காக கன்னியாகுமரியில் சூட்டிங்கில் உள்ளார் பிரியா பவானி சங்கர்.

அந்த இடம் மிகவும் அருமையாக உள்ளதாகவும் மக்கள், சாப்பாடு உள்ளிட்டவை சிறப்பாக உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார். அவரது நடிப்பு இயல்பாகவும் அழகாகவும் உள்ளதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து அவர் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படம் ரிலீசானது.

ஓ மணப்பெண்ணே படம்

ஓ மணப்பெண்ணே படம்

தெலுங்கில் ஹிட்டான பெல்லி சூப்புலு படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் ஹரீஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து புதுமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவான ஓ மணப்பெண்ணே படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. பெல்லி சூப்புலு படத்தையே இந்தப் படம் ஓரம்கட்டி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ள.

Recommended Video

Oh Manapenne Pressmeet | Harrish Kalyan, Priya Bhavani Shankar, Suresh Chandra
ஓடிடியில் வெளியீடு

ஓடிடியில் வெளியீடு

ஓடிடியில் வெளியான இந்தப் படம் ஹரீஷ் மற்றும் பிரியாவிற்கு கேரியர் பெஸ்ட் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை ஏற்கனவே இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்துள்ள நிலையில் 5 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அமைதியான நடிப்பு

அமைதியான நடிப்பு

படத்தில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ப்ரியா. காதல் காட்சிகள் இல்லாத படத்தில் முகபாவத்திலேயே காதலை வெளிப்படுத்தும் சவாலான கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார் ப்ரியா. இந்நிலையில் அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங்கிற்காக கன்னியாகுமரியில் உள்ளார் அவர்.

பத்து தல படம்

பத்து தல படம்

கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முப்தி என்ற படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் இந்தப் படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் கலநது கொண்ட ப்ரியா பவானி சங்கர் அந்த ஸ்பாட் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி குறித்து பாராட்டு

கன்னியாகுமரி குறித்து பாராட்டு

முக்கடல் சங்கமம், அந்த பகுதியின் மக்கள் மற்றும் சாப்பாடு அனைத்தும் சிறப்பாக உள்ளதாகவும் மிகவும் அழகான இடம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இடம் அடுத்த முறை வரும் வரையில் தன்னுடைய நெஞ்சில் நீங்காமல் நிலைத்து இருக்கும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X