காதலருடன் ப்ரியா பவானி சங்கர் சென்ற ஜாலி ட்ரிப்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். கடைசியாக அவர் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அடுத்ததாக அவரது நடிப்பில் ஜீப்ரா, டிமாண்ட்டி காலனி 2, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் தனது காதலர் ராஜவேலுவுடன் சிட்னிக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக களமிறங்கினார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே தனது நடிப்பில் கவனத்தை ஈர்த்தார் ப்ரியா.

முன்னணி நடிகை: முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடிப்பில் வரிசையாக அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி ஷங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.

பல படங்கள் ஓகே; ஒரு ஹிட்?: ப்ரியா பவானி சங்கர் கடைசியாக ரத்னம் படத்தில் நடித்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. பல படங்களில் அவர் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு ஹிட்கூட மேயாத மான் படத்துக்கு பிறகு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் ப்ரியா பவானி ஷங்கர் ராசியில்லாத நடிகை என்ற பெயரையும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன.

சொந்த தொழில்: இதற்கிடையே சினிமாவில் மட்டுமின்றி தொழிலிலும் கவனம் செலுத்துகிறார் அவர். அந்தவகையில், லியாம்ஸ் டைனர் (Liam's Diner)என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார். புதிய தொழில் தொடங்கிய அவருக்கு ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள் வரை வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலை அவர் தனது காதலருக்காக தொடங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, டிமாண்ட்டி காலனி 2, ஜீப்ரா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: இதற்கிடையே அவர் தனது கல்லூரியிலிருந்தே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் அவர்கள் இன்னும் சில வருடங்களில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ராஜவேலுவுடன் அடிக்கடி வெளிநாட்டுக்கு ப்ரியா பவானி சங்கர் செல்வது வழக்கம். அந்தவகையில் இப்போது ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள்.

அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களுடன், சிட்னிக்கு இம்முறை வந்தபோதுதான் அதன் முழுமையான அழகை உணர முடிந்தது. அமைதியான நகரத்தில் அழகான மெமரிக்களை உருவாக்கிக்கொண்டது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.



Click it and Unblock the Notifications











