காதலரை பிரிந்தாரா..? சொந்த வதந்திக்கு பிரபல நடிகை கொடுத்த அப்படியொரு ரியாக்‌ஷன்.. ஆஜரான காதலர்!

By

சென்னை: காதலரை பிரிந்ததாக வந்த வதந்தியை அடுத்து பிரபல நடிகை கொடுத்துள்ள போட்டோ ரியாக்‌ஷனை லட்சக்கணக்கனோர் லைக் செய்துள்ளனர்.

Recommended Video

Priya Bhavani Shankar love Breakup | latest post | RajaVel |Mafia, Bommai | Reacting Gossip

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார்.

இது அவரை பிரபலமாக்கியது. அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம்

அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் மாஃபியா படத்தில் நடித்தார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

கிசுகிசுக்கள்

கிசுகிசுக்கள்

இவர் பற்றி காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி வெளியாகி வந்தன. அதை மறுத்து வந்த பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலர் ராஜ்வேலின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். கல்லூரி காலத்தில் இருந்தே அவரைக் காதலித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தன்னைப் பற்றி வந்த கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

காதலரை பிரிந்ததாக

காதலரை பிரிந்ததாக

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன், சித்ரா பெளர்ணமி அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அது 'மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு, அழகு' என்று கூறியிருந்தார். இதை வைத்து அவர் காதலரை பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாயின.

காதலர் ராஜ்வேல்

காதலர் ராஜ்வேல்

இதற்கு தனது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார், பிரியா பவானி சங்கர். அதாவது, போனில் இருக்கும் செய்தியை கண்டு அவர் சிரிப்பது போன்ற போட்டோவை போஸ்ட் செய்துள்ளார். தன்னைப் பற்றி வரும் வதந்திகளை படிக்கும்போது, இப்படித்தான் என்று கூறியுள்ளார். இதற்கு அவர் காதலர் ராஜ்வேல், 'நானும் வரலாமா?' என்று கமென்ட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X