நம்ம ப்ரியா பவானி சங்கரா இது, நம்பவே முடியலயே: வியப்பில் ரசிகர்கள்

By Siva

Recommended Video

Interview With Priya Bhavani Shankar: அடுத்த படம் தல-யுடன்?.. ரகசியம் உடைக்கும் பிரியா- வீடியோ

சென்னை:ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். அவர் சின்னத்திரை பிரபலமாக இருந்தபோதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் இருந்து அவர் விலகிய போது ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

Priya Bhavani Shankar looks stunning in new picture

காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போகிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் திருமதி ஆனாலும் தயவு செய்து நடிப்பை மட்டும் விட்டுவிட வேண்டாம். எங்களுக்காக இந்தியாவுக்கு வந்து நடிக்க வேண்டும் என்று கெஞ்சினார்கள். இந்நிலையில் தான் ப்ரியா பவானி சங்கர் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.

ப்ரியா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், டிவியில் பார்த்த நம்ம ப்ரியாவா இது, நம்பவே முடியவில்லையே என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். நல்ல வேளை ப்ரியா சிவப்பு, ஊதா நிறம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் இல்லையென்றால் நாங்கள் பிரபல கட்சியின் கொடி போன்று உள்ளதே என்று தவறாக நினைத்திருப்போம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

சிலரோ, மேக்கப் அதிகமாக இருக்கிறது ப்ரியா. நீங்கள் இயற்கையிலேயே பேரழகி அதனால் மேக்கப்பை பெரிதாக நம்ப வேண்டாம் என்று அக்கறையுடன் தெரிவித்துள்ளனர்.

அந்த புகைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் மிகவும் அழகாக உள்ளதாக கூறி ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். ப்ரியா எந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டாலும் அவரை ரசிகர்கள் புகழ்வது வழக்கமாகிவிட்டது. பல நடிகைகளை நெட்டிசன்கள் கலாய்க்கும் நேரத்தில் ப்ரியாவுக்கு இப்படி ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பது நல்ல விஷயம்.

ப்ரியா பவானி சங்கர் எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து நடித்த மான்ஸ்டர் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அந்த மகிழ்ச்சியில் உள்ளார் ப்ரியா. தற்போது ப்ரியாவின் கையில் 3 படங்கள் உள்ளன. தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல் தனக்கு எது செட்டாகுமோ அதை மட்டும் ஏற்று நடித்து ரசிகர்களை இம்பிரஸ் செய்து கொண்டிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X