மாபியா புரொமோஷன்.. கருப்பு உடையில் பிரியா பவானி சங்கர்.. மனசைக் கவ்வும் போட்டோக்கள்!

Recommended Video

Priya Bhavani Shankar Reveals her Love |Rajvel | Indian 2 | Mafia

சென்னை : கருப்பு ஆடையில் மிக அசத்தலான போட்டோசூட் ஒன்றை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ளார். அதனுடன் மாஃபியா புரோமோஷன் ஹாஸ்டேக்கையும் இணைத்துள்ளார் .

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக மாறியிருக்கும் பிரியா பவானி சங்கர் கடைசியாக மான்ஸ்டர் படத்தில் நடித்து இருத்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் நல்ல வெற்றியையும் பெற்று தந்தது .

 Priya bhavani Shankar new photos

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது வெளியாக போகும் படம் தான் மாஃபியா இந்த படத்தின் விளம்பரத்திற்காக கருப்பு ஆடையில் மிக அசத்தலான போட்டோசூட் ஒன்றை நடத்தியிருக்கிறார். இந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி மாஃபியா புரோமோஷன் என்ற ஹாஸ்டேக்கையும் அதனுடன் இணைத்துள்ளார் .

இந்த போட்டோவிற்கு முதல் கமெண்ட் செய்தவர் நடிகை இந்துஜா, அழகான இந்த ஆடை எனக்கு பிடித்திருக்கிறது என்று கமெண்ட் செய்து இருந்தார். அதற்கு பிரியா பவானிசங்கரும் பதில் அளித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த நாயகிக்கு இதயங்கள் ஸ்மைலிகளாக கமெண்ட் செய்வது வழக்கம். பிரியா பவானி சங்கரின் இந்த கருப்பு நிற ஆடைக்கு ஏற்றவாறு கருப்பு இதயங்களை கமெண்ட் பாக்ஸ் முழுக்க பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள் .

 Priya bhavani Shankar new photos

நடிகை பிரியா பவானி சங்கர் தொகுப்பாளர் பணியிலிருந்து நடிகையானவர் . தற்போது இவர் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது . குறிப்பாக சில நடிகைகள் வாய்ப்பு வரும் நேரங்களில் தவறான தேர்வுகளை செய்து சினிமா வாழ்க்கையை வீணடித்து விடுவார்கள். இதில் கவனமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தான் நடிக்க போகும் பாத்திரங்களையும் கதையையும் தெளிவாக தேர்வு செய்து வருகிறார் .

 Priya bhavani Shankar new photos

பிரியா பவானி சங்கர் அடுத்தாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் குருதி ஆட்டம் ,களத்தில் சந்திப்போம்,கசடதபற,பொம்மை,வான் என பல படங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகபடங்களில் நடித்து வரும் ஒரே நாயகி பிரியா பவானி சங்கர் தான் .

 Priya bhavani Shankar new photos

மாஃபியா படம் வரும் பிப்ரவரி 21 வெளியாகுகிறது. படத்தை துருவங்கள் பதினாறு பட இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். அருண்விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X