தனுஷும் சிம்புவும் நல்ல நடிகர்கள் என்பது தெரிந்த விஷயம்... மனம்திறந்த ப்ரியா பவானி சங்கர்!

சென்னை : பிரியா பவானி சங்கர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து தற்போது சிம்பு மற்றும் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் நல்ல நடிகர்கள் என்று அவர் பாராட்டியுள்ளார்.

சினிமாவின் இளம் நடிகை

சினிமாவின் இளம் நடிகை

டிவியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகை என்று தன்னை மெருகேற்றிக் கொண்டவர். சினிமாவில் இளம் நடிகையாக கால் பதித்து தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேயாதமான் படத்தில் அறிமுகம்

மேயாதமான் படத்தில் அறிமுகம்

எஸ்ஜே சூர்யா உடன் இவர் நடித்திருந்த மான்ஸ்டர் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்று தந்தது. முன்னதாக மேயாதமான் என்ற அறிமுக படத்திலேயே இவர் நல்ல விமர்சனங்களைப் பெற்றார். தொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஓ மணப் பெண்ணே படம்

ஓ மணப் பெண்ணே படம்

சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இவர் நடித்து வெளிவந்துள்ள ஓ மணப் பெண்ணே படம் இவருக்கு நல்ல நடிகை அந்தஸ்தை பெற்று தந்துள்ளது.

வெற்றிப் படங்கள்

வெற்றிப் படங்கள்

கவர்ச்சியை நம்பாமல் நல்ல நடிப்பை மட்டுமே நம்பி இவர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.ஓ மணப் பெண்ணே ரீமேக் படமாக இருந்தாலும் ஒரிஜினலை ஓரம் கட்டும் வகையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கரின் நடிப்பு இருந்தது.

தனுஷ், சிம்புவுடன் பிரியா

தனுஷ், சிம்புவுடன் பிரியா

தற்போது ப்ரியாவிடம் அதிகமான படங்கள் கைவசம் உள்ளது. தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதேபோல சிம்புவுடன் பத்து தல படத்தில் நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

Recommended Video

Yuvan Shankar Raja speech in Maanadu Pre-release, Mahat, Y.G.Mahendran
தனுஷ், சிம்பு குறித்து ஆச்சரியம்

தனுஷ், சிம்பு குறித்து ஆச்சரியம்

இந்த இரு படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நாயகியாக களம் இறங்கி வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனுஷ் மற்றும் சிம்பு குறித்து தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தனுஷ், சிம்பு சிறப்பான நடிகர்கள்

தனுஷ், சிம்பு சிறப்பான நடிகர்கள்

தனுஷ் மற்றும் சிம்புவுடன் நடித்த அனுபவம் சிறப்பானது என்று கூறியுள்ள பிரியா, அவர்கள் இருவரும் மிகச்சிறந்த நடிகர்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தானே என்றும் தெரிவித்துள்ளார்.

கைவசம் அரை டஜன் படங்கள்

கைவசம் அரை டஜன் படங்கள்

தற்போது இவர் வசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவருக்கு தனியாக ஒரு காதல் கதையும் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X