திருமணமான அந்த நடிகர் மீதுதான் க்ரஷ்ஷாம்.. கடைசி 4 வருடங்கள்தானாம்.. ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்
சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். கடைசியாக அவர் தமிழில் பொம்மை படத்திலும், தெலுங்கில் பீமா படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஜீப்ரா, டிமாண்ட்டி காலனி 2, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் தனக்கு அந்த நடிகர் மீது தீவிரமான க்ரஷ் இருப்பதாக அவர் கூறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி சங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக களமிறங்கினார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே தனது நடிப்பில் கவனத்தை ஈர்த்தார் ப்ரியா.

முன்னணி நடிகை: முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி சங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.
பல படங்கள் ஓகே; ஒரு ஹிட்?: ப்ரியா பவானி சங்கர் கடைசியாக பொம்மை படத்தில் நடித்தார். பல படங்களில் அவர் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு ஹிட்கூட மேயாத மான் படத்துக்கு பிறகு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் ப்ரியா பவானி ஷங்கர் ராசியில்லாத நடிகை என்ற பெயரையும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன.
சொந்த தொழில்: இதற்கிடையே சினிமாவில் மட்டுமின்றி தொழிலிலும் கவனம் செலுத்துகிறார் அவர். அந்தவகையில், லியாம்ஸ் டைனர் (Liam's Diner) என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார். புதிய தொழில் தொடங்கிய அவருக்கு ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள் வரை வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலை அவர் தனது காதலருக்காக தொடங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, டிமாண்ட்டி காலனி 2, ஜீப்ரா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.
அந்த நடிகர் மீதுதான் க்ரஷ்: இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் உங்களுக்கு எந்த நடிகர் மீது க்ரஷ் இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கடந்த நான்கு வருடங்களாக விக்கி கௌஷல் மீதுதான் க்ரஷ் என்று தெரிவித்தார். விக்கி கௌஷல் கத்ரீனா கைஃப்பின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடயே ப்ரியா பவானி சங்கர் தனது கல்லூரி காலத்திலிருந்தே ராஜகோபால் என்பவரை காதலித்துவருவது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











