மொத்த பழியையும் சுமத்துவார்கள்.. ரொம்ப வலிக்கும்.. இந்தியன் 2 பற்றி ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆன அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து பலரும் ப்ரியா பவானி சங்கரை கிண்டல் செய்ய தொடங்கினார்கள். அடுத்ததாக அவரது நடிப்பில் டிமாண்ட்டி காலனி 2 படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் ப்ரியா பவானி சங்கர் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக களமிறங்கினார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே தனது நடிப்பில் கவனத்தை ஈர்த்தார் ப்ரியா.

Priya Bhavani Shankar Indian 2 Demonty Colony 2 2

பல படங்கள் ஓகே; ஒரு ஹிட்?: ப்ரியா பவானி சங்கர் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக டிமாண்ட்டி காலனி 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கத்து. இந்தச் சூழலில் அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ப்ரியா அளித்த பேட்டியில் தன் மீது வைக்கப்படும் கேலிகள், கிண்டல்கள் குறித்து மனம் திறந்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

ப்ரியா பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், " நான் நடித்த முதல் பெரெஇய பட்ஜெட் படம் இந்தியன் 2. அதற்கு முன்பு நான் ஒரு ஹீரோவுடன் டூயட் ஆட வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. உதாரணமாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. அந்தப் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதைத்தான் நான் பார்த்தேன்.

எந்த வருத்தமும் இல்லை: நீங்கள் ஒரு ஹீரோவுடன் சேர்ந்து டூயட் ஆடினால்தான் என்னை ஹீரோயினாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு படத்தில் தயாரிப்பாளரின் பணம் முதல் நடிகர்களின் உழைப்புவரை நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படம் தோல்வியடைந்தால் அது அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதிக்கும். இந்தியன் 2 படம் நன்றாக இல்லை என்றதும் என்னை கேலி செய்தார்கள். அது எனக்கு வலியை ஏற்படுத்தியது.

பழி சுமத்துகிறார்கள்: ஆனால் இந்தியன் 2 படத்தின் கதையில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததும் அது தோல்வி அடையும் என்று எனக்கு தெரிந்தாலும் நான் அந்தப் படத்தைதான் தேர்வு செய்வேன். ஏனெனில் ஷங்கர் சார் இயக்கி கமல் சார் நடிக்கும் ஒரு படத்தில் எனக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட வாய்ப்பை யாராவது நிராகரிப்பார்களா. அந்த வாய்ப்பை நான் கைவிட விரும்பவில்லை. நான் நடித்த படங்கள் வெற்றியடைந்தால் அது என்னால்தான் என்று யாரும் பாராட்டவில்லை. ஆனால் படம் தோல்வியடைந்தால் மொத்த பழியையும் என் மீதுதான் சுமத்துவார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X