அந்த நடிகருடன் லிப்லாக் அடிக்க ஆசை.. ஓபனாக சொன்ன ப்ரியா பவானி சங்கர்.. ஓஹோ கதை அப்படி போகுதோ
சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அவர் தமிழில் பொம்மை படத்திலும், தெலுங்கில் பீமா படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஜீப்ரா, டிமாண்ட்டி காலனி 2, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் எந்த நடிகருடன் லிப்லாக் செய்ய ஆசை என்று கூறியிருக்கிறார். அது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக களமிறங்கினார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே தனது நடிப்பில் கவனத்தை ஈர்த்தார் ப்ரியா.

முன்னணி நடிகை: முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி ஷங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.
பல படங்கள் ஓகே; ஒரு ஹிட்?: ப்ரியா பவானி ஷங்கர் கடைசியாக பொம்மை படத்தில் நடித்தார். பல படங்களில் அவர் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு ஹிட்கூட மேயாத மான் படத்துக்கு பிறகு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் ப்ரியா பவானி ஷங்கர் ராசியில்லாத நடிகை என்ற பெயரையும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன.
சொந்த தொழில்: இதற்கிடையே சினிமாவில் மட்டுமின்றி தொழிலிலும் கவனம் செலுத்துகிறார் அவர். அந்தவகையில், லியாம்ஸ் டைனர் (Liam's Diner)என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார். புதிய தொழில் தொடங்கிய அவருக்கு ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலை அவர் தனது காதலருக்காக தொடங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, டிமாண்ட்டி காலனி 2, ஜீப்ரா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.
லிப்லாக் அடிக்க ஆசை: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "கதைக்கு தேவை என்றால் லிப்லாக் காட்சியில் நடிப்பேன். அதிலும் எனக்கு ரொம்பவே பிடித்த நடிகர் அல்லு அர்ஜுன். அவருடன் அப்படி நடிப்பதற்கு ஆசை" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே அவர் பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் லிப்லாக் காட்சியில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











