என்னது இந்தக் காரணத்தால தான் பிரியா பவானி சங்கர் திருமணம் தடையாகி இருக்கா?
சென்னை : நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
யானை, திருச்சிற்றம்பலம் படங்கள் அடுத்ததாக ரிலீசாக உள்ள நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது திருமணம் தடைப்பட்ட காரணத்தை பிரியா பவானி சங்கர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர்
நடிகை பிரியா பவானி சங்கர் டிவியிலிருந்து சினிமாவிற்கு வந்தவர். இவருக்கு கோலிவுட் சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட்டாகி இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

சீரியல் முதல் சினிமா வரை
இவர் நடித்து விஜய் டிவியில் வெளியான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் தொடர்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றதுடன், பட வாய்ப்புகளையும் பெற்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த படம் மேயாத மான்.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தை ரத்னகுமார் இயக்கியிருந்தார். தொடர்ந்து மான்ஸ்டர் உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை கோலிவுட் ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. தற்போது கோலிவுட்டில் அதிகமான படங்களில் ஒருவராக மாறியுள்ளார் பிரியா. பத்து தல, யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், பொம்மை, ருத்ரன் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

தடைப்பட்ட திருமணம்
இதனிடையே, தான் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆக திட்டமிட்டதாக சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் சீரியல், சினிமா என அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததால் தான் தன்னுடைய முடிவை கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.

திருமணம் குறித்து யோசிக்கவில்லை
தற்போது சினிமாவில் அதிகமாக நடித்து சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே உள்ளதாகவும் திருமணம் குறித்து தற்போது யோசிக்கக்கூட நேரமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரியா பவானி சங்கர் தனது காதல் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் முன்னதாக பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











