வாவ்.. செம உற்சாகம்.. சூப்பராக கோல் போட்ட பிரியா பவானிசங்கர்!

சென்னை : நடிகை பிரியா பவானிசங்கர் தனது கொரன்டைன் நேரத்தை வீடியோ கேம் விளையாடி கழித்து வருகிறார்.

Recommended Video

Top Celebrities Quarantine | Lock Down Diaries

பல நடிகர் நடிகைகளும் இந்த 21 நாள் ஊரடங்கை ஒவ்வொரு விதமாக தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். அதேப்போல வளர்ந்து வரும் நாயகியான பிரியா பவானி சங்கர், கால்பந்து விளையாட்டை வீடியோ கேமில் விளையாடி கொண்டிருக்கிறார். இதை அவரது அம்மா தனது செல்பேசியில் படம் பிடிக்க மிகவும் விறுவிறுப்பாக விளையாடி கொண்டே இருக்கிறார் பிரியா. இந்த நேரத்தில் அவர் முன்னே நிற்கும் அம்மாவையும் தள்ளச்சொல்லிவிட்டு அசத்தலாக ஒரு கோலை அடிக்கிறார் பிரியா பவானி சங்கர்.

 Priya Bhavani Shankar playing football in a video game

அந்த கோலை அடித்தவுடன் உற்சாகமடையும் பிரியா பவானி சங்கர் பிகில் படம் ராயப்பன் ஸ்டைலில் ' கப்பு முக்கியம் பிகிலு' என்று கூறி உற்சாகத்தை வெளிபடுத்தி வாயை மூடி சிரிக்கிறார்.

 Priya Bhavani Shankar playing football in a video game

பிரியா பவானி சங்கரின் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி சங்கரின் உற்சாகத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர் . பலரும் நீங்கள் அருமையாக விளையாடுகிறீர்கள் எங்களுடன் விளையாடுங்கள் யாரு சிறப்பாக ஆடுகிறார்கள் என்று பார்க்கலாம் என்றெல்லாம் ஜாலியாக கூறி வருகின்றனர்.

 Priya Bhavani Shankar playing football in a video game

பிரியா கப்பு முக்கியம் பிகிலு என்று விஜய் ஸ்டைலில் கத்தியதால் அதிகபடியான விஜய் ரசிகர்கள் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர். பிரியா பவானி சங்கர் விஜயுடன் நடித்தால் செம்மையாக இருக்கும் என்றும் சில விஜய் ரசிகர்கள் தங்களின் கருத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளனர்.

 Priya Bhavani Shankar playing football in a video game

கொரன்டைன் ஆரம்பித்ததில் இருந்து தனது பழைய புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்த பிரியா தற்போது தான் வீட்டில் என்ன செய்து நேரத்தை கழித்து கொண்டுள்ளார் என்பதனை பகிர்ந்து இருக்கிறார்.

பிரபலங்கள் மட்டுமில்லை பல மக்களும் வீட்டில் இருந்த படியே வீடியோ கேம், கேரம், செஸ் மற்றும் கார்ட்ஸ் போன்றவற்றை விளையாடி தங்களின் நேரத்தை கழித்து வருகின்றனர். இந்த நேரத்தில் பல பெற்றோர்களும் தங்களின் முழு நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு வருவது மகிழ்ச்சியை பலரின் வீட்டில் அதிகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X