Just In
- 5 hrs ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- 6 hrs ago
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- 6 hrs ago
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- 8 hrs ago
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
Don't Miss!
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு 51, எனக்கு 30... எஸ்.ஜே.சூர்யாவின் காதலை நிராகரித்தாரா பாதி சிம்ரன்? பரபரப்பில் கோலிவுட்
சென்னை: இயக்குனரும் நடிகருமான எஸ்.ஏ.சூர்யாவின் காதலை நடிகை பிரியா பவானி சங்கரின் காதலை நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார். இதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன.
மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அடுத்து கார்த்தியின் கடைகுட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது.

மான்ஸ்டர்
இதையடுத்து எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படத்துக்குப் பிறகு மாஃபியா, கசட தபற, இந்தியன் 2, பொம்மை உட்பட சில படங்களில் நடித்துவருகிறார்.
பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இதை ராதாமோகன் இயக்கி வருகிறார்.
|
பொம்மை
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஒரு போஸ்டரில் பொம்மையுடனும் மற்றொரு போஸ்டரில் பிரியா பவானி சங்கருடனும் இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

கொஞ்சம் சிம்ரன்
டிவிட்டரில் அந்த போஸ்டருக்கு கேப்ஷனாக, பிரியாவை பார்த்தால் கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா போன்று தெரிகிறது இல்லையா? என்று பதிவிட்டிருந்தார்.
இதை ரசிகர்கள் பாராட்டியிருந்தனர்.

காதலைச் சொன்னார்
இந்நிலையில், இதன் படப்பிடிப்பின்போது, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரிடம் தன் காதலைச் சொன்னதாகவும் அதற்கு பிரியா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வயது வித்தியாசம்
பிரியா காதலை மறுக்க வயதுதான் காரணமாம். எஸ்.ஜே.சூர்யாவுக்கு 51 வயது. பிரியாவுக்கு 30. 21 வருடம் வித்தியாசம் இருப்பதால் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது.
இது ஒருபக்கம் இருந்தாலும் பிரியா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.