இது புதுசால்ல இருக்கு.. கல்யாணம் பற்றி கேட்ட ரசிகரை மீம்ஸ் போட்டுத் திணறடித்த பிரியா பவானி சங்கர்!

By

சென்னை: திருமணம் பற்றி கேள்வி கேட்ட ரசிகரை, மீம்ஸ் போட்டுத் திணறடித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார்.

இது அவரை பிரபலமாக்கியது. அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இந்தியன் 2

இந்தியன் 2

அடுத்து கார்த்தியின் கடைகுட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் மாஃபியா படத்தில் நடித்தார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

கிசுகிசுகள்

கிசுகிசுகள்

இவர் பற்றி நிறைய காதல் கிசுகிசுகள் வந்தன. அதை மறுத்துவந்த பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலரின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அதில், 10 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி காலத்தில் மகிழ்ச்சியான, நம்பிக்கை உள்ள, கவர்ச்சி இல்லாத சுமாரான அழகுடன் இருந்த என்னை, நீ காதலித்த போது எனக்கு ஆச்சர்யாக இல்லை.

காதல் பற்றி

காதல் பற்றி

ஆனால் இப்போதும் அதே அன்புடன் நீ என்னுடன் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது' என்று கூறி இருந்தார். இது அப்போது பரபரப்பானது. இந்நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், காதல் பற்றி கேட்டபோது, கவிதையாகப் பதிலளித்துள்ளார்.

சரியான முடிவு

சரியான முடிவு

சரியான ஒருவருடன் காதல் வயப்பட்டால், அது அவ்வளவு அழகானதாக இருக்கும். உங்கள் வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் தவறான நபருடனான காதல் என்றால் அது உங்களை அழித்துவிடும். அதனால் யாரை காதலிக்க வேண்டும் என்பதில் சரியான முடிவை எடுங்கள், டியூட்' என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர், எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க? என்று கேட்டார். அதற்கு மீம்ஸ் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

நீயா என்னை

நீயா என்னை

வெளிநாட்டு செய்தியாளருடன் தோனி இருக்கும் போட்டோ அது. எப்போ ரிடையர்மென்ட் என்று கேட்கும் அவரது கேள்வியை சரியாகச் சமாளித்தார் தோனி. அந்த போட்டோவை இப்போது பதிவிட்டுள்ளார். அதில், நீயா என்னை படிக்க வச்ச? நீயா எனக்கு வேலை வாங்கி கொடுத்த? நீயா எனக்கு இஎம்ஐ கட்டுற?, அட்லீஸ்ட் எனக்கு பொண்ணு எதனா தேடினியா? அப்போ இந்த காபிய குடிச்சுட்டு கிளம்பு' என்கிறது அந்த மீம்ஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X