பிரியா பவானி சங்கரின் புதிய பட தலைப்பு இது தான்...தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க
சென்னை : அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. பொதுபோக்கு நிறைந்த இந்த படத்தை டிரைடன்ட் ஆர்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காமெடி கலந்த பொழுதுபோக்கான இந்த படத்திற்கு ஹாஸ்டல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும் பாய்ஸ் ஹாஸ்டலில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் ஹாஸ்டல் வார்டன் வேடத்தில் நாசர் நடித்துள்ளார்.

இதில் அசோக் செல்வன் கடைசி ஆண்டு படிக்கும் மாணவனாக நடித்துள்ளார். இவருடன் சதீஷ், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி பிரபலம் யோகி, ரவி மரியா, கிருஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு, குளிர் 100 டிகிரி படத்திற்கு இசையமைத்த போபோ சாஷி தான் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த படத்தின் வேலைகள், நேற்று நிறைவடைந்தன. இந்த தகவலை படக்குழுவினருடன் இருக்கும் போட்டோவுடன் அசோக் செல்வன், சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த படம் 2015 ல் வெளியான மலையாள காமெடி படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











