Priya Bhavani Shankar: பத்து தல படத்துக்காக பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: செய்திவாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறிய பிரியா பவானி சங்கர் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த சில ஆண்டுகளாக வலம் வருகிறார்.
சம்பள விஷயத்தில் மற்ற நடிகைகள் போல பெரிதாக பிரச்சனை ஏதும் பண்ணாதவர் என்கிற பெயரை எடுத்துள்ள பிரியா பவானி சங்கருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்க அதுதான் மிகவும் முக்கிய காரணம் என்கின்றனர்.
பல கோடி ரூபாய் சம்பளத்தை எல்லாம் கேட்காமல், சரியான சம்பளத்தை வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக மாறி உள்ள பிரியா பவானி சங்கர் பத்து தல படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

அழகும் அறிவும்
தனி ஒருவன் படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையில் அழகும் அறிவும் சேர்ந்த பொண்ணு என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிகள் நடிகை பிரியா பவானி சங்கருக்கு ரொம்பவே ஆப்டாக பொருந்தும் என சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுக்கள் உள்ளன. செய்தி வாசிப்பாளராக இருந்த நிலையில், மீடியா குறித்தும் பொது விஷயங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவும் கொண்ட ஒரு அழகான ஹீரோயின் தான் பிரியா பவானி சங்கர்.

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். முதல் படத்திலேயே அவரது நடிப்பில் முதிர்ச்சி இருந்ததை போலவே தொடர்ந்து அவர் தேர்வு செய்யும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் செம மெச்சூரிட்டியை காட்டி நடித்து வருகிறார். கடைக்குட்டி சிங்கம் படத்தில் அத்தை பெண்ணாக வந்த பிரியா பவானி சங்கர் அலட்டிக் கொள்ளாமல் கடந்த ஆண்டு வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் ஒரு சின்ன கேரக்டரில் வந்து ரசிகர்களை கவர்ந்து சென்றார்.

கவுதம் கார்த்திக் ஜோடி
இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் மேனன் நடித்துள்ள பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கமர்ஷியல் படத்தில் ஹீரோயின் காட்சிகள் குறைவாகத்தான் இருக்கும் என ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலேயே தனது போர்ஷன் படத்தில் எப்படி இருக்கும் என்கிற லேசான எச்சரிக்கையை கொடுத்து விட்டார். இந்நிலையில், இந்த படத்துக்கு அவர் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

சம்பளம் எவ்வளவு
நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்ந்து பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தனது சம்பளத்தை மொத்தமாக கோடிகளில் இன்னமும் அவர் அதிகரிக்கவில்லை என்றே கூறுகின்றனர். பத்து தல படம் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் நடிக்க சிம்புவுக்கே 5 கோடி ரூபாய் சம்பளம் என்றும் படத்தின் நாயகன் கவுதம் கார்த்திக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் என்றும் ஹீரோயினாக நடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாயிஷாவுக்கு பாதி
பத்து தல படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள நடிகர் ஆர்யாவின் மனைவிக்கு மட்டும் அதிகபட்சமாக 40 லட்சம் வரை சம்பளம் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், சாயிஷா கடைசியாக சமீபத்தில் தான் கமிட் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இப்படியொரு சம்பளம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கைவசம் 5 படங்கள்
ஒரு கையில் உள்ள 5 விரல்களை அப்படியே காட்டும் அளவுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் பத்து தல படத்திற்கு பிறகு 5 படங்கள் உள்ளன. பொம்மை, ருத்ரன், டிமான்டி காலனி 2, இந்தியன் 2 மற்றும் ஜீப்ரா எனும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.


Click it and Unblock the Notifications











