Priya Bhavani Shankar - காசு வந்தா காக்காக்கூட கலர் ஆகிடும் - யாரை சொல்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்?

சென்னை: Priya Bhavani Shankar (ப்ரியா பவானி ஷங்கர்) ப்ரியா பவானி ஷங்கர் பழைய வீடியோவை பகிர்ந்து காசு வந்தா காக்காக்கூட கலர் ஆகிடும்னு சொல்வாங்க என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே தனது நடிப்பில் அதகளம் செய்திருந்தார் ப்ரியா பவானி ஷங்கர்.

Priya Bhavani Shankar Shares her old memories

முன்னணி நடிகை: தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் பத்து தல, ருத்ரன், அகிலன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி ஷங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர். மேலும் பல படங்களில் அவர் கமிட்டாகியிருக்கிறார்.

ட்ரெண்டாகும் போஸ்ட்: இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனனை பல வருடங்களுக்கு முன்பு பேட்டி எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர். மேலும் அந்தப் பதிவில் அவர், "இந்த வீடியோ பழைய நினைவுகளை நினைவுப்படுத்துகிறது. எனக்கு ரொம்ப ஸ்பெஷல். யார் இதனை வெளியிட்டார்களோ அவர்களுக்கு நன்றி. எனது சுவாரசியமான பயணத்தை உணர முடிகிறது.

மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது:உங்கள் உடலையும் உங்கள் தோற்றத்தையும் வைத்து சிலர் உங்களை காயப்படுத்துவார்கள். நீங்கள் யார் என்பதையும் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதையும் மற்றவர்களை பேச, முடிவு செய்ய அனுமதிக்காதீர்கள்.

இதுதான் அழகு என்ற எந்த வரையறையும் இல்லை. ஸ்கின் கேர், வாழ்க்கை முறை என நடிகர்கள் நிறைய செலவிடுவார்கள். ஆனால் சாதாரண கல்லூரி மாணவியால் அதெல்லாம் செய்ய முடியாது. அதனால் உங்களிடம் நல்ல தோற்றமும், உடல்வாகும், தோல் நிறமும் இல்லையென்றால் பரவாயில்லை.

Priya Bhavani Shankar Shares her old memories

காசு வந்தா காக்காக்கூட கலர் ஆகும்: இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை வைத்து முடிவுக்கு வராதீர்கள். இன்று நான் தயாராக எனக்கு 10 பேர் கொண்ட குழு இருக்கிறார்கள். அழகுக்கு இதுதான் வரையறை என்று எதுவும் இல்லை. நிச்சயம் அது இலக்கு இல்லை. அது ஒரு வேலை. அதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். காசு வந்தா காக்கா கூட கலராகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். காசு தானா தேடி வராது. நீங்கள் உலகத்துடன் சண்டையிட்டு விரும்புவதை பெற வேண்டும்.

உங்களுக்கு அது கிடைக்கும்போது அதனை வைத்து நீங்கள் செய்யப்போகிறீர்கள் என முடிவெடுங்கள். கலர் ஆகனும் என்று எந்த அவசியமும் இல்லை. ராஜவேல் ஐ லவ் யூ. நீ அப்போது எப்படி பார்த்தாயோ, அப்படியேதான் இப்பொழுதும் பார்க்கிறாய் நன்றி. நீங்கள் இதுபோன்ற நபரை கண்டுபிடித்தால் விட்டுவிடாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X